Mercury Transit In Aries: வேத ஜோதிடத்தின் படி, சந்திரனுக்கு அடுத்தபடியாக புதன் மிக வேகமாக பயணிக்கும் கிரகமாகும். கிரகங்களின் அதிபதியான புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் வருகிற மே 10 ஆம் தேதி புதன் கிரகம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தை பெறக் கூடிய மூன்று ராசிக்காரர்கள் உள்ளன. அவை வாழ்க்கையில் புதனின் அருளால் லாபகரமான பலனை அடைவார்கள். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் (Budh Gochar 2024) நன்மை பயக்கும். ஏனெனில் புதன் கிரகம் உங்கள் ராசியின் வருமானம் மற்றும் லாபம் தரும் இடத்தில் பார்வையடையப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். புதிய வருமானம் மூலம் அதிகளவு பணத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். இந்த நேரத்தில், அலுவலகத்தில் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் உங்கள் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். இதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். முதலீடு மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள், வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இது தவிர, பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றிலும் லாபம் பெறலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு (Cancer Zodiac Sign) புதனின் பெயர்ச்சியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து கர்ம வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த பெயர்ச்சி காலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் நல்ல செய்திகளை நீங்கள் பெறுவீர்கள். உங்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில், வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், இந்த நேரத்தில் வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தலாம். இந்த நேரத்தில், புதிய ஆர்டர்களைப் பெறுவது நல்ல லாபத்தைத் தரும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் சாதகமாகவே இருக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதாவது, பிள்ளைகளுக்கு திருமணம் ஆகலாம் அல்லது வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். இந்த நேரத்தில், அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும் நல்ல உறவு இருக்கும். நிதி உதவி பெறலாம். மேலும், இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ