Weekly Horoscope: குபேர அருளால் இந்த வாரம் இந்த ராசிகளுக்கு பண மழை

Weekly Horoscope, July 25-31: கிரகங்களின் சஞ்சாரத்தால், இந்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும், அதேபோல் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 25, 2022, 12:30 PM IST
  • இந்த வாரம் சில சிரமங்கள் வரலாம்.
  • இந்த காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
  • தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
Weekly Horoscope: குபேர அருளால் இந்த வாரம் இந்த ராசிகளுக்கு பண மழை title=

இந்த வாரம் குரு வக்ர பெயர்ச்சி மீனா ராசியில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி நடக்க உள்ளனது. அந்தவகையில் வார ராசிபலன் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. அதன்படி கிரகங்களின் சஞ்சாரத்தால், இந்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும், அதேபோல் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த வார எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலக்கலாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

ரிஷபம்- இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நிறுத்தி வைத்த பணத்தை திரும்பப் பெறலாம்.

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று பிஸியாக இருக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். இந்த வாரம் புதிய விஷயங்களைத் தொடர்வதில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரம் வேலைகள் குறித்த நேரத்தில் முடிவடைவதைக் காணலாம். ஒருவரின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். 

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தொழில் மற்றும் வேலையில் பதவி உயர்வு பெறலாம். முதலீடு செய்த பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

கன்னி- கன்னி ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம், பண இழப்பு ஏற்படலாம். நிதி பிரச்சனைகள் நீங்கும். காதல் வாழ்க்கை மேம்படும்.

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில சிரமங்கள் வரலாம். குடும்ப உறுப்பினருடன் தகராறு ஏற்படலாம். பணியிடத்தில் சிரமங்கள் இருக்கலாம்.

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். வியாபாரிகள் லாபம் அடையலாம். ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

தனுசு ராசி- தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையாக இருக்கும். இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

மகரம்- மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் உறவுகளில் சிறப்பு கவனம் தேவை. இந்த வாரம் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

கும்பம்- கும்ப ராசிக்காரர்களின் பிரச்சனைகள் இந்த வாரம் படிப்படியாக முடிவுக்கு வரலாம். இந்த நேரத்தில் நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறலாம். பணி இடத்தில் பாராட்டு பெறலாம்.

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையாக இருப்பார்கள். இந்த வாரம் பல தடைகளை சந்திக்க நேரிடலாம். கூடுதல் வருமானம் கிடைக்க வழி ஏற்படும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News