2022 கார்த்திகை மாத ராசிபலன்: முருகரின் அருள் பெற்ற ராசிக்கு ஏற்றம்! யாருக்கு எச்சரிக்கை?

Sun Transit Monthly Horoscope: கார்த்திகை மாதம் தொடங்கிய இன்று சூரியனின் சஞ்சாரம் யாருக்கு என்ன செய்யும்? ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது?  தெரிந்துக் கொள்ளுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2022, 12:21 AM IST
  • 2022 கார்த்திகை மாத ராசிபலன்
  • மேஷம் முதல் கடகம் வரை பலன்கள்
  • மீனத்திற்கு எச்சரிக்கை
2022 கார்த்திகை மாத ராசிபலன்: முருகரின் அருள் பெற்ற ராசிக்கு ஏற்றம்! யாருக்கு எச்சரிக்கை? title=

புதுடெல்லி: கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம், கணிப்புகளின் துணை கொண்டு, நமது வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படலாம். அப்போது நமது வாழ்க்கை சுமூகமாக செல்லும். நவம்பர் மாதம் 17ம் தேதியான இன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சென்றுவிட்டார். வேறு சில கிரகங்களும் இணைந்து சூரியனின் சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... இது கார்த்திகை மாத ராசி பலன்கள்...

 மேலும் படிக்க | மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை

இன்று முதல் ஒரு மாதத்திற்கு அதாவது, 17-11-2022 முதல் 16-12-2022 வரை விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். இந்த மாதம், 12 ராசிகளுக்குமான ராசிபலன்களில் 

மேஷம்: குடும்பத்திலும், தொழில் மற்றும் பணியிடங்களிலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மனதில் நிம்மதி நிலவும் மாதம் இது. சுப பலன்களால் மனம் மகிழும் மாதமாக கார்த்திகை மாதம் உங்களுக்கு அமையும்.  

ரிஷபம்: ஆரோக்கியம் மேம்படும், கடந்த மாத சூரியன் பெயர்ச்சியால் இருந்த அயர்ச்சி, தற்போது உற்சாகத்துடன் நல்லவிதமாக மாறும். நிம்மதியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு வாழ்க்கையில் வசந்தத்தைக் கூட்டும்.

மேலும் படிக்க | நவ பஞ்சம தோஷம் படுத்தும் பாடு! பாவம் இந்த 4 ராசிகள்: இது செவ்வாய்-கேது சேர்க்கை தோஷம்

மிதுனம்: பொருளாதார நிலை உயரும். ராசியிலேயே செவ்வாய் இருந்ததால் கவனமாக இருந்தவர்கள், தற்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்.குடும்பத்தில் நிம்மதியும், நல்ல விஷயங்களும் நடக்குக்ம்.

கடகம்: மனதில் மகிழ்ச்சி பொங்கும்.வரவு வந்தாலும், செலவும் அதிகரிக்கும் என்றாலும், அது சுப விரயமாக இருக்கும் என்பதால் கவலைப்பட தேவையில்லை. கார்த்திகை மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும்.  

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

சிம்மம்: சிம்ம ராசியினரின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் நடந்தேறும்.சாதகமான நிலையால் நிம்மதியும், மகிழ்ச்சியும் வாழ்க்கையில் வந்து சேரும். பேச்சு சாதுர்யம் அதிகரிக்கும்.  

கன்னி: சற்று கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது. பண வரத்து இருந்தாலும், செலவும் அதற்கு ஏற்றாற்போல இருக்கும். சுப காரியங்கள் செய்து மகிழுங்கள்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஞானக்காரகரின் அருளால் அருமையான வாழ்க்கை அமையப்போகும் 3 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News