மக்களே உஷார்..விரைவில் சனி வக்ர பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு மட்டும் பம்பர் ஜாக்பாட்

Shani Vakri 2023: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் போக்கை மாற்றுவதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கூடிய விரைவில் சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிலை அடையப் போகிறார், இது 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 10, 2023, 09:40 AM IST
  • கூடிய விரைவில் சனி வக்ர பெயர்ச்சி அடைவார்.
  • 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும்.
  • சனி போல் கொடுப்பார் இல்லை சனி போல் கெடுப்பார் இல்லை.
மக்களே உஷார்..விரைவில் சனி வக்ர பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு மட்டும் பம்பர் ஜாக்பாட் title=

சனி வக்ர பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி.சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 டிகிரியில் இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். அந்தவகையில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைந்து தற்போது ஜூன் 17-ம் தேதி முதல் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். சனியின் வக்ரநிலை அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். சனி சில ராசிக்காரர்களுக்கு தொல்லை தருவார், மறுபுறம் சனி சில ராசிக்காரர்களுக்கு ராஜாவைப் போல் வைத்திருக்க முடியும். சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம், உயர் பதவி, புகழ் மற்றும் மரியாதையை கொண்டு வரும்.

சனி ஏற்கனவே மெதுவாக நகரும் கிரகம். வக்ரம் பெற்றால் சனிபகவான் இன்னமும் மெதுவாக நகர்வார். சனி வக்ரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார். சனி போல் கொடுப்பார் இல்லை சனி போல் கெடுப்பார் இல்லை என்று சொல்வார்கள். எனவே சனி வக்ர நிலை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலனை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: தொழில்களில் சிறப்பான பலனை பெறப்போகும் இந்த 5 ராசிகள்

இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு சனி அளவில்லா பாலை தருவார்

மிதுன ராசி: ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி மிதுனத்தின் ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலை அடைவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்கிரத்தின் சுப பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இதனுடன் மூதாதையர் சொத்துக்களிலும் ஆதாயம் பெறலாம். வியாபாரம் தொடர்பான அனைத்து வேலைகளிலும் லாபம் கிடைக்கும். பயணங்களும் வெற்றி பெறும். இந்த நேரத்தில், தடைபட்ட அனைத்து பணிகளையும் முடிக்க முடியும்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சனி வக்ர நிலை அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், சனி வக்கிரம் உங்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தடைபட்ட வேலைகள் முடிவடையும், வியாபாரம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறலாம். மேலும் வேலை தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

தனுசு ராசி: சனியின் வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள். இக்காலத்தில் கையில் எடுத்த காரியங்கள் வெற்றியடையும். இதனுடன், முக்கிய முடிவுகள் எடுப்பதில் உதவி கிடைக்கும். வேலை வாய்ப்புகளை வழங்குபவர்கள் தங்கள் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த நேரம் மாணவர்களுக்கும் சுபமாக இருக்கும். கல்வித் துறையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

மீன ராசி: மீன ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சனி வக்ர நிலை அடையப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறலாம். இதனுடன், வணிகத் துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்திலும் உயர்வு இருக்கும். பண ஆதாயத்திற்கான அறிகுறிகளும் உள்ளன. இதன் மூலம், துறையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. கையில் எடுத்த காரியம் வெற்றியடையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - குருவின் அருளால் அதிஷ்டம் பெரும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News