சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை, செல்வம் கொழிக்கும்

Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இவர்களுக்கு ஜாக்பாட் பலன் கிடைக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சுப பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2022, 02:04 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்படும்.
  • இந்த காலத்தில் உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும்.
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை, செல்வம் கொழிக்கும் title=

சுக்கிர ராசி பரிவர்த்தனை 2022: செல்வம், பொலிவு, சுகங்கள் மற்றும் செழுமை ஆகியவற்றை வழங்குபவரான சுக்கிர தேவன் ஆகஸ்ட் 7, ஞாயிற்றுக்கிழமை அன்று ராசியை மாற்றியுள்ளார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். சுக்கிரனின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிகப்படியான மகிழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுக்கிரன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று, மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். ஆகஸ்ட் 31 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சுப பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்படும். இந்த காலத்தில் உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பண விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு சலசலப்பு ஏற்படும் 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும். பல இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலை இந்த காலகட்டத்தில் வலுவாக இருக்கும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மகிழ்ச்சி பொங்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் அமையும். சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | அடுத்த 4 மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் நிச்சயம் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News