குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு சாதகமான நேரம், ராஜபோக வாழ்க்கை!!

Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், எந்தெந்த ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2023, 01:28 PM IST
  • குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறது.
  • நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் வேலைகள் இந்த காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும்.
  • அலுவலக பணிகளிலும் நல்ல செய்திகள் வந்து பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு சாதகமான நேரம், ராஜபோக வாழ்க்கை!!  title=

குரு பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம் ஆகியவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இவற்றின் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கின்றன. சில ராசிக்காரர்களுக்குப் பெயர்ச்சிகள் சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமைகின்றன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி வியாழன் கிரகம், அதாவது குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறப் போகிறார். ஆகையால் இந்த மாற்றம் கிரக சஞ்சார ரீதியாக முக்கியமான மாதமாக உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் குரு பெயர்ச்சியால் உருவாகும் அற்புதமான யோகத்தின் பலன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது. 

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், எந்தெந்த ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையப் போகிறது. வாழ்வில் மகிழ்ச்சி மழை பொழியும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடங்களிலிருந்து பண ஆதாயம் இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

கடகம்

குரு பெயர்ச்சியின் சுப பலன்களால் கடக ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன. பொருளாதார நிலை வலுவாக இருக்கும், தொழில் துறையிலும் வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த 4 ராசிகள் ஜாக்கிரதை! 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களின் வாழ்விலும் பல நல்ல செய்திகள் வந்து சேரும். இந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் பலனளிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கினால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மனைவியுடனான உறவும் சிறப்பாக இருக்கும்.

துலாம்

குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் வேலைகள் இந்த காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலக பணிகளிலும் நல்ல செய்திகள் வந்து பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி, குடும்ப வாழ்க்கை மற்றும் அனைத்து விஷயங்களிலும் மிக நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலையும் முன்பை விட வலுவாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காதலில் சஞ்சரிப்பவரா? அன்பால் வசீகரிக்கும் வசீகராவாக மாற்றும் சுக்கிரன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News