இந்த ராசிகள் மீது சனியின் சுப பார்வை: இவங்களுக்கு அடிச்சது ஜாக்பாட், தலைவிதி மாறும்

Shani Dashmi Drishti: சனியின் சுப பார்வை எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2023, 08:20 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பண லாபம் உண்டாகும்.
இந்த ராசிகள் மீது சனியின் சுப பார்வை: இவங்களுக்கு அடிச்சது ஜாக்பாட், தலைவிதி மாறும்  title=

சனி பகவானின் அருள் பார்வை: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும் தீய விளைவுகளை அளிக்கிறார். அனைத்து கிரகங்களின் மாற்றங்களுக்கு முக்கியத்துவன் உண்டு என்றாலும், சனி பகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உள்ளது. இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சனி பகவானின் பார்வை:

சனி பகவானின் பார்வைக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. அவர் எந்த இடத்தில் அமர்ந்து எந்த ராசியை எப்படி பார்க்கிறார் என்பது மிக முக்கியமாகும். சனியின் சுப பார்வை ஒருவர் மீது பட்டால், அந்த நபரின் அனைத்து வேலைகளும் வெற்றியடைகின்றன. அதேசமயம் சனியின் தீய பார்வை பட்டால், அந்த நபர் பல வித சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். 

சமீபத்தில், ஏப்ரல் 11, 2023 அன்று, சனியின் பார்வை கும்ப ராசியிலிருந்து விருச்சிக ராசிக்காரர்கள் மீது விழுந்துள்ளது. விருச்சிக ராசிக்காரர்கள் மீது சுக்கிரனின் ஏழாவது திருஷ்டியும் உள்ளது. கும்ப ராசியிலிருந்து சனியின் பார்வையான தசமி திருஷ்டி பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சனியின் இந்த பார்வை எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | சூரிய கிரகணம் அன்று உருவாகும் யோகங்கள்... கடின உழைப்பின் முழு பலனையும் பெறும் 5 ராசிகள்

ரிஷப ராசி

ரிஷபம் ராசிக்காரர்களின் பணி ஸ்தானத்தில் சனியின் சுப பார்வை உருவாகி வருகிறது. சனியின் பத்தாம் பார்வை இவர்களுக்கு சாதகமாக அமையும். சனியின் அருளால் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

சிம்ம ராசி 

சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண லாபம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியமும் முன்பை விட மேம்படும். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் பத்தாம் பார்வை சாதகமாக இருக்கும். கும்பம் சனிபகவானின் சொந்த ராசியாகும். இது போன்ற சூழ்நிலையில் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் லாப வாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருகிறது. சனியின் பார்வையால் நீங்கள் நன்மை அடைவீர்கள், உங்கள் நிதி நிலை மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரிய மகாதசை என்றால் என்ன? யாருக்கெல்லாம் இந்த யோகம் கிடைக்கும்? புத்தாண்டு பலன்கள் 2023

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News