சனியின் வக்ர பெயர்ச்சி: குபேர யோகத்தில் குளிக்க போகும் ராசிகள் இவையே

Sani Vakra Peyarchi till november: சனி தேவன் ஜூன் மாதத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார், இப்போது அவர் நவம்பர் வரை இந்த நிலையில் இருப்பார். எனவே சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் நற் பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 7, 2023, 12:08 PM IST
  • சனிபகவானின் லாபப் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது.
  • நிதிநிலைமை நல்ல முன்னேற்றம் பெற போகின்றது.
  • மிதுன தொழிலதிபர்கள் அதிர்ஷ்டத்தை நம்பி சும்மா இருக்க வேண்டாம்.
சனியின் வக்ர பெயர்ச்சி: குபேர யோகத்தில் குளிக்க போகும் ராசிகள் இவையே title=

சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தில் சனி தேவன் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. அவர் நீதியின் கடவுள் மற்றும் கர்மாவை வழங்குபவர் என்று அழைக்கப்படுகிறார். இக்காரணத்தால், மக்கள் அவருடைய அருளைப் பெற ஏங்குகிறார்கள் மற்றும் அவரைப் பிரியப்படுத்த எல்லாவிதமான வழிபாடுகளையும்-பாராயணங்களையும், நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைந்தார், அதாவது அவர் தற்போது எதிர் திசையில் நகர்கிறார். வருகிற நவம்பர் 4ஆம் தேதி  மதியம் 12:30 மணிக்கு  மேல் வக்ர நிவர்த்தி அடைகிறார். நவகிரகங்களில் சனி பகவான் மெதுவாக நகரக் கூடியவர். இரண்டு ஆண்டுகள் ஒரு ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் தற்போது இருக்கிறார். எனவே சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சியால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி: சனிபகவானின் லாபப் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் உங்களுக்கு லாபத்தை அள்ளித் தரப் போகிறார். வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் குவியும். பொருளாதார விஷயங்களில் கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது தீரும். வருமானம் அதிகரிப்பதோடு, செலவுகளும் ஓரளவு குறையும். உங்கள் செலவுகளை குறைக்க வேண்டிய நேரம் இது, சனி தேவன் தேவையற்ற செலவுகளை உடனடியாக நிறுத்துவார். உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சனி பகவானின் பார்வை விழுவதால் அலைச்சல் மூலம் உங்களது சிக்கலை தீர்த்து வைப்பார். 

மேலும் படிக்க | குரு தரும் கோடீஸ்வர யோகம்.. ஆவணி முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

ரிஷப ராசி: ரிஷபம் என்றால் காளை. இதனால் காளை போல் உழைத்தும் பலன் கிடைக்காத ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிதேவர் இப்போது வட்டியுடன் சேர்த்து பலன் தருவார். நீங்கள் வியாபாரம் செய்தால், அதை வணிகக் கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யுங்கள், மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் வேலையை விரைவுபடுத்தி சோம்பேறித்தனத்தை விடுங்கள், அப்போதுதான் பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நிதிநிலைமை நல்ல முன்னேற்றம் பெற போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுன ராசி: மிதுன தொழிலதிபர்கள் அதிர்ஷ்டத்தை நம்பி சும்மா இருக்க வேண்டாம். வக்ர சனி கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பலன்களைத் தரும், எனவே சோம்பேறித்தனம் உங்களை ஆதிக்கம் செலுத்த வேண்டாம். மருத்துவர்கள், மருத்துவம் சம்பந்தப்பட்டவர்களுக்கு திடீர் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். அறுவை சிகிச்சை தொடர்பான உபகரண வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் கவனம் செலுத்தவும். பழைய பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக செகண்ட் ஹேண்ட் வாகன சந்தையுடன் தொடர்புடையவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News