சுக்கிரன் அருளால் இவர்களுக்கு ஆண்டு முழுவதும் சுக்கிர தசை!!

Venus Transit: ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை நன்றாக இருந்தால், அவர் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2022, 07:00 PM IST
  • சுக்கிரன் கிரகம், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
  • சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • சுக்கிரன் கிரகம் செல்வத்தின் காரணியாகவும் கருதப்படுகிறது.
சுக்கிரன் அருளால் இவர்களுக்கு ஆண்டு முழுவதும் சுக்கிர தசை!! title=

சுக்கிரன் பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. சுக்கிரன் கிரகம், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று இந்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. சுக்கிரன் கிரகம் செல்வத்தின் காரணியாகவும் கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை நன்றாக இருந்தால், அவர் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

இதுதவிர திருமணம் முதலிய முக்கிய நிகழ்வுகளுக்கும் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது முக்கியமானதாக கருதப்படுகின்றது. ராசிகளில் சுக்கிரனின் தாக்கம் மற்றும்  இந்த வருடத்தில் எத்தனை முறை சுக்கிரன் பெயர்ச்சி அடையும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் உச்சம் மற்றும் நீச்சம் பெறும் ராசிகளில் சுக்கிரனின் தாக்கம்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச நிலையில் இருந்தால், அவர் வாழ்வில் அதன் நல்ல தாக்கம் தெரியும். அந்த நபர்கள் இசை, கலை மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் புகழ் பெறுகிறார்கள். இது மட்டுமின்றி, ஒருவரின் குணாதிசயத்திலும் சுக்கிரன் கிரகத்தின் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

சுக்கிரன் எந்த ராசியில் பெயர்ச்சியாகிறாரோ, அந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு மகத்தான பண வரவும் ஏற்படுகின்றது. 

மேலும் படிக்க | 2023 புத்தாண்டு ராசிபலன், இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 

2023-ல் சுக்கிரன் எத்தனை முறை மாற்றம் காணப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்: 

- ஜனவரி 22, 2023- மாலை 04.03 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்பத்தில் நுழைவார்.

- பிப்ரவரி 15, 2023- இரவு 08.12 மணிக்கு கும்பத்தை விட்டு மீன ராசியில் நுழைவார்.

- மார்ச் 12, 2023- காலை 08:37க்கு மீன ராசியை விட்டு மேஷ ராசிக்கு மாறுகிறார்.

- ஏப்ரல் 06 2023- காலை 11.10 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

- மே 02, 2023- மதியம் 02:00 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து புறப்பட்டு மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.

- மே 30, 2023 - இரவு 07.51 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நகர்கிறார்.

- ஜூலை 07, 2023- அதிகாலை 4.28 மணிக்கு கடக ராசியை விட்டு சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

- 07 ஆகஸ்ட் 2023- காலை 10:37 மணிக்கு, சிம்ம ராசியை விட்டு, கடகத்தில் வக்ரமாவார்.

- அக்டோபர் 02, 2023- அதிகாலை 01.18 மணிக்கு கடக ராசியை விட்டு சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

- நவம்பர் 03, 2023- அதிகாலை 05:24 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்

- நவம்பர் 30, 2023- அதிகாலை 01:14 மணிக்கு கன்னி ராசியை விட்டு துலாம் ராசியில் பிரவேசிப்பார்.

- டிசம்பர் 5, 2023- காலை 06:55 மணிக்கு துலாம் ராசியிலிருந்து புறப்பட்டு விருச்சிக ராசிக்கு மாறுகிறார்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மீனத்தில் மாளவ்ய ராஜயோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமர்க்களமான புத்தாண்டு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News