சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

Saturn Transit: ஜூலை 12 அன்று, சனி தன் சொந்த ராசியான மகரத்தில் வக்ர நகர்வில் மாறுவார். சனியின் இந்த மாற்றத்தால் இரண்டு ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2022, 06:33 PM IST
  • சனி இடம் மாறியவுடன், அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் தெரியும்.
  • சனி மகர ராசியில் நுழைந்தவுடன் இரண்டு ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் விலகும்.
  • மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் சனி தசையின் பிடியில் சிக்குவார்கள்.
சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம் title=

சனி பெயர்ச்சி 2022 பலன்கள்: ஜூலை மாதத்தில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதில் சனியும் அடங்கும். ஜூலை 12 அன்று, சனி அதன் சொந்த ராசியான மகரத்தில் வக்ர நகர்வில் மாறுவார். மகர ராசியில் பிரவேசித்த பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை சனி பகவான் அங்கு இருப்பார். 

ஏப்ரல் மாதம், சனி தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்தார். ஜூன் 5 ஆம் தேதி சனி பிற்போக்கு நகர்வில் மாறினார். இப்போது மீண்டும் சனி தனது சொந்த ராசியான மகர ராசியில் ஜூலை 12 ஆம் தேதி வக்ரமாவார். இந்த சனி மாற்றத்தால் மீண்டும் இரண்டு ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள். இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள்

சனி இடம் மாறியவுடன், அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் தெரியும். சனி மகர ராசியில் நுழைந்தவுடன் மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் சனி தசையின் பிடியில் சிக்குவார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஜனவரி 17 வரை சனியின் கொடுமையான பார்வையை சந்திக்கிறார்கள். இந்த ராசிகளில் 6 மாதங்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். 

மேலும் படிக்க | Weekly Horoscope: இந்த 4 ராசிக்காரர்கள் ஜூலை 10 வரை கவனமா இருக்கணும் 

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்:

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியில் பிரவேசித்ததும் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசை ஆரம்பித்தது. ஆனால் ஜூலை 12 ஆம் தேதி சனி மகர ராசியில் நுழைந்தவுடன் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் விலகும். இந்த நிவாரணம் 6 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். இதற்குப் பிறகு, ஜனவரி 17, 2023 முதல், மீண்டும் சனி தசையின் பிடியில் சிக்குவார்கள்.

சனி தசையின் பாதிப்புகளைத் தவிர்க்கும் பரிகாரங்கள்:

- சனியின் கொடூரமான பார்வை ஒரு நல்ல மனிதனை அழிக்கிறது. 

- சனி தசையினால், ஒரு நபர் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். 

- அத்தகைய சூழ்நிலையில், அவரது வாழ்வில் பல பிரச்சனைகள் வரத் தொடங்குகின்றன.

- ஆகையால், இந்த காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

- சனியின் தாக்கங்களைத் தவிர்க்க, முடிந்தவரை ஏழைகளுக்கு உதவுங்கள். 

- எறும்புகளுக்கு உணவளிக்கலாம். 

- சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

- சுந்தரகாண்டத்தையும் பாராயணம் செய்வது பலன் தெரியும்.

- ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News