சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நாளை முதல் பொற்காலம்.. வாழ்க்கையில் உச்சம் தொடுவார்கள்

Sukran Peyarchi: சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் பண மழையில் நனைவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 02:17 PM IST
  • சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக, ​​கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நாளை முதல் பொற்காலம்.. வாழ்க்கையில் உச்சம் தொடுவார்கள் title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: பல கிரகங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் ராசிகளை மாற்றப் போகின்றன. மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்புக்கு காரணி கிரகமான சுக்கிரனும் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அக்டோபர் 2ம் தேதி அதிகாலை 1:02 மணிக்கு சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைகிறார். இதன் பிறகு நவம்பரில் சிம்ம ராசியில் இருந்து வெளியேறி கன்னி ராசிக்குள் நுழைவார். 

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit) அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் பண மழையில் நனைவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இவர்களுக்கு இந்த காலத்தில் எடுத்த பணிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரம் பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள்: 

ரிஷப ராசி (Taurus)

அக்டோபரில் சுக்கிரன் சிம்மத்தில் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள காரியங்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசைகள் நிறைவேறும், நிதி நிலை மேம்படும்.

கடக ராசி (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி தொழிலில் பொன்னான வாய்ப்புகளை அள்ளிதரும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுடன் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களின் காத்திருப்பு நீங்கும். நல்ல வேலை கிடைக்கும், பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கப்படும். சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். 

கன்னி ராசி (Virgo)

சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக, ​​கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நுழைய உள்ளார், எனவே இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். தொழிலில் புதிய சாதனைகளை செய்வீர்கள், புதிய உச்சம் தொடுவீர்கள். எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | அக்டோபர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது குபேரரின் அருள் மழை, ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

துலாம் ராசி (Libra):

சுக்கிரன் துலாம் ராசியை ஆளும் கிரகம் என்பதால், ரிஷபம் போலவே, துலாம் ராசிக்காரர்களும் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும், வருமானம் கூடும். தொழிலதிபர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடும். அதிக லாபம் பெறலாம்.எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும்.

விருச்சிக ராசி (Scorpio)

சுக்கிரனின் பெயர்ச்சி காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிகப்படியான பணம் சம்பாதிக்கலாம். எதிர்பாராத பல இடங்களிலிருந்து பணம் வரும். இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நிதிநிலை மேம்படும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். ஒட்டுமொத்தமாக, உங்களுக்கு நல்ல நேரம் உருவாகி வருகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News