Surya Guru Yuti: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் தாக்கங்கள் ஏற்படுகின்றன.
ஏப்ரல் மாதம் கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சியாவார். இந்த ராசியில் ஏற்கனவே குரு பகவான் இருக்கிறார். இதன் காரணமாக மேஷத்தில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கை நடக்கும். வேது சாஸ்திரங்களின்படி குரு மற்றும் சூரியனின் சேர்க்கை சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கின்றது. இந்த இரு கிரகங்களின் சேர்க்கை மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மேஷத்தில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அனைத்து ராசிகளில் தாக்கம் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்
தனுசு (Sagittarius)
சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருமணத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும். வேலை தேடிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு அளிக்கப்படும். அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இதன் காரணமாக நிதி ஆதாயம் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இப்பொழுது அதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சனி செவ்வாய்... இந்த ராசிகளின் தலைவிதி மாறும்!
மகரம் (Capricorn)
குரு சனி சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த காலத்தில் பலவித நன்மைகள் உங்களைத் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீட்டால் லாபம் கிடைக்கும். இப்பொழுது முதலீடு செய்ய நல்ல நேரம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை மேற்கொள்வீர்கள். அவற்றில் வெற்றியும் காண்பீர்கள். உங்கள் பணம் வரவு அதிகமாகும்.
மீனம் (Pisces)
மீனத்தில் குரு மற்றும் சூரியனின் சேர்க்கை மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் லாபகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த தொல்லைகள் இப்பொழுது தீரும். சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உள்ள மீன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நேரம் நன்றாக உள்ளது. பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவிற்கான வழிகள் அதிகமாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். வாழ்க்கை நிம்மதியாகும் அமைதியாகவும் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தாய் அல்லது மனைவி படத்தை உங்கள் பர்ஸில் வைத்துள்ளீர்களா? இந்த விஷயத்தில் ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ