கஜகேசரி யோகத்தால் கெட்டகாலம் முடிந்து பொன்னான வாய்ப்பைப் பெறும் ராசிகள்!

Gajakesari Yogam 2023 Benefits: மார்ச் 22 அன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் பலருக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும், மீனத்தில் சந்திரனுடன் இணையும் குரு பகவான் சில ராசியினருக்கு யோகத்தையும் செல்வ வளத்தையும் ஏற்படுத்துவார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2023, 10:57 AM IST
  • மங்கலத்தைப் பொங்க வைக்கும் குரு
  • குருவுடன் இணைந்து வாழ்க்கையை பிரகாசமாக்கும் சந்திரன்
  • சந்திரனும் குருவும் இணைந்தால் யோகம்
கஜகேசரி யோகத்தால் கெட்டகாலம் முடிந்து பொன்னான வாய்ப்பைப் பெறும் ராசிகள்! title=

Gajakesari Yogam: ஜோதிடத்தின் படி, கிரகப் பெயர்ச்சி வெவ்வேறு ராசிகளில் கூட்டணியை உருவாக்குகிறது. இந்த கூட்டணிகள் பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. தற்போது தேவகுரு வியாழன் மீன ராசியில் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் மீனத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாகப் போகிறது. வியாழன் மற்றும் சந்திரன் இணைவதால் உருவாகும் இந்த மிகவும் மங்களகரமான யோகம் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டு வரும்.  

மார்ச் 22 அன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் பலருக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும், மீனத்தில் சந்திரனுடன் இணையும் குரு பகவான் சில ராசியினருக்கு யோகத்தையும் செல்வ வளத்தையும் ஏற்படுத்துவார்

சந்திரன் மற்றும் வியாழன் இணைவது கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கும். மீனத்தில் கஜகேசரி ராஜயோகம் அமைவது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் பெரும் பொருளாதார பலன்களையும் முன்னேற்றத்தையும் தரும்.

மேலும் படிக்க | Trigrahi Yoga: மீனத்தில் உருவாகும் 'திரிகிரஹி யோகம்' மீனத்துக்கு ஜாலி! தனுசுக்கு?

கடகம்: குரு மற்றும் சந்திரன் இணைவதால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பொருளாதார பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் உங்களை உன்னதமான இடத்திற்கு கொண்டு செல்லும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும்.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மேலும் படிக்க | ராஜாதி ராஜ யோகம்..இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை பொழியும்

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் பெரும் பலன்களைத் தரும். பணப் பலன்கள் கிடைக்கும், வருமானமும் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். பதவி உயர்வு பெறலாம்.

திடீர் பண வரவு ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தலாம். ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகிறது. ஒரு புதிய ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படலாம், இது எதிர்காலத்தில் பெரிய லாபத்தை தரும்.

மேலும் படிக்க | மீனத்தில் சங்கமித்த 3 கிரகங்கள்..! செல்வமழையை எதிர்கொள்ள போக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்

மீனம்: குரு மற்றும் சந்திரன் இணைவதால் உருவாகும் கஜகேசரி யோகம், மீன ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களைக் கொடுக்கும். உங்கள் ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

நம்பிக்கை அதிகரிக்கும். மாபெரும் வெற்றியைத் தரும் வகையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News