Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அட்சய பாத்திரமே கிடைத்தது போல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த யோகத்தினால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள் போன்றவை வந்து சேரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2022, 10:21 AM IST
  • சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளிலும் கஜ கேசரி யோகம் அமைகிறது.
  • கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது.
Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்! title=

ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளன. அந்த 12 கட்டங்களிலும் உள்ள எந்த ஒரு ராசிக்கும் 1, 4, 7, 10ம் கட்டங்கள் அல்லது வீடுகள், ஜோதிட சாத்திரத்தில் கேந்திர வீடுகள் எனப்படும். ஒருவரது ஜாதகத்தில் இந்தக் கேந்திர வீடுகளில் குருவும், சந்திரனும் இருந்தால் அவருக்கு கஜகேசரி யோகம் இருப்பதாகப் பொருள். மேலும் சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளிலும் கஜ கேசரி யோகம் அமைகிறது. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். கஜகேசரி யோகம் இருந்தால், யானையைப் போல பலசாலிகளாகவும் சிங்கத்தைப் போன்ற எதையும் கண்டு அஞ்சாத உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த யோகத்தினால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும். அதோடு, இந்த யோகம் உள்ள நபருக்கு, எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. 

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு நாளும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் சுப மற்றும் அசுப பலன்களைத் தருகிறது. இந்து நாட்காட்டியின்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி மீனத்தில் கஜகேசரி யோகம் உருவாகிறது. மீன ராசிக்காரர்களுக்கு எப்படி பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம். ஜோதிட சாஸ்திரப்படி கஜகேசரி யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுவதோடு, அன்று விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதி என்பது கூடுதல் விசேஷம்.

ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை மீன ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்நாளில் மீன ராசியில் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த காலகட்டத்தில், மீன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவதற்கான முழு வாய்ப்பையும் காண்கிறார்கள். இந்த நேரத்தில் வியாழன் கிரகமாகிய குரு பகவான் மீனத்தில் அமர்ந்திருக்கிறார். சோமவாரத்தில், ஆகஸ்ட் 15ல் சந்திரனின் சஞ்சாரத்தால் இந்த ராசியில் கஜகேசரியின் கூட்டு உருவாகிறது. கஜகேசரி யோகம் தேவகுரு வியாழன் மற்றும் சந்திரன் இணைவதால் உருவாகிறது. ஜோதிடத்தில் இது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்திரனும் தேவகுரு வியாழனும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. மேலும், சங்கஹர சதுர்த்தியான இந்நாளில் கணபதியின் அருளும் கிடைக்கும். விநாயகர் செழிப்பு மற்றும் ஞானத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இந்த நாளில் பல தற்செயல் நிகழ்வுகள் காரணமாக, இந்த நாளின் ஆன்மீக முக்கியத்துவம் இன்னும் அதிகரித்துள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News