சூரியன் பெயர்ச்சி 2022: இந்த 5 ராசிகளுக்கு வெற்றி மழை, அதிர்ஷ்டம் பெருகும்

Sun Transit 2022 in Sagittarius: டிசம்பர் 16, 2022 அன்று சூரியன் தனது ராசியை மாற்றி தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 12, 2022, 07:41 PM IST
  • இந்த ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு அருமையான காலம்.
  • சூரியன் யாருக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார்.
சூரியன் பெயர்ச்சி 2022: இந்த 5 ராசிகளுக்கு வெற்றி மழை, அதிர்ஷ்டம் பெருகும் title=

வேத ஜோதிடத்தின் படி, சூரிய கிரகமானது ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். 2022ஆம் ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நாளில் சூரியன் தன் ராசியை மாற்றி தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி அடைவார். பின், ஜனவரி 14, 2023 இரவு தனுசு ராசியில் இருக்கும் சூரியன் அதன் பிறகு மகர ராசியில் இடப் பெயர்ச்சி ஆகுவார். இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

சூரியனின் பெயர்ச்சி 5 ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்க உதவும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி நல்ல காலத்தைக் கொண்டுவரும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். இரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக மாறும். ஆற்றல், தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றத்தால் முன்னேற்றமும் பணவரவும் உண்டாகும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமானம் கூடும். 

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். முன்னேற்றமும் பணமும் மட்டுமின்றி வாழ்வில் வசதிகளும் செல்வமும் பெருகும். புதிய வீடு, வாகனம், மனை வாங்கலாம். வியாபாரம் சிறப்பாக இயங்கும்.

சிம்மம்: சூரியன் பெயர்ச்சியான உடன் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார், இதனால் சில பெரிய வெற்றிகளை அடைவீர்கள். பதவி உயர்வு, பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

தனுசு: தனுசு ராசியில் தான் சூரியன் பெயர்ச்சியாக உள்ளதால், இந்த நேரம் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், வேலையில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் நிலை வலுவாக இருக்கும். பதவி உயர்வுக்கான வழி அமையும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News