நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சில கிரகங்கள் சிலருடன் நட்பு பாராட்டினால், வேறு சில கிரகத்துடன் விரோதம் பாராட்டும். நவகிரகங்களில் பாவ கிரகங்கள் என குறிப்பிடப்படும் சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, ஆகிய ஐந்து கிரகங்களும் ஒன்றுடன் மற்றொருன்று இணைந்திருக்கும்போது, ஜாதகருக்கு மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஆனால், ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களை சுப கிரகங்கள் பார்த்தால், கோபம் இருந்தாலும் குணமும் இருக்கும். அதிகாரம் செய்யும் தன்மையும் இருக்கும். சூரியன் வேறு பாவகிரகத்துடன் இணைந்தும், ஜென்ம ராசி அல்லது லக்னத்தில் பலமிழந்திருந்தாலும் ஒரு ஜாதகருக்கு கோபம் மூக்குக்கு மேல் வரும் என்று சொல்லலாம்.
அதிலும் ஜென்ம லக்னத்தில் பாவகிரகங்கள் சேர்க்கை மற்றும் பாவகிரகங்களின் பார்வையுடன் அமையப் பெற்றிருந்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவார்கள். அந்த வகையில் சூரியனும் கேதுவும் ஒன்றுக்கொன்று விரோதமான கிரகங்களாகக் கருதப்படுபவை. அதனால்தான், இந்த கிரக சேர்க்கை பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அது மட்டுமல்ல, இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணைந்தால் ’கிரஹன் தோஷம் என்று அழைக்கப்படும் ஒரு அசுப யோகத்தை உருவாக்குகிறது. கன்னியில் சூரியனும் கேதுவும் இணைந்திருப்பதால் உருவான இந்த தோஷம், அதிகாரம், அலட்சியம், சோர்வு என தேவையில்லாத பிரச்சனைகளைக் கொடுக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையானது, பணப் பிரச்சனைகளையும் கொண்டு வரும். வாழ்க்கையில் பிடிப்பை விடச் செய்யும்.
ஜோதிடத்தின் படி, சூரியன் மற்றும் கேது இருவரும் நெருப்புத் தன்மை கொண்டவர்கள். இந்த இரு நெருப்பு கிரகங்களும் ஒன்றிணைந்தால், கேது சூரியனின் ஆத்மார்த்தமான ஆற்றலையும் நேர்மறையான தாக்கத்தையும் குறைப்பார். கிரகண தோஷம் ஏற்படும்போது, ஒரு ஜாதகருக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சனைகளை உண்டாக்குவது, ஈகோ மோதல்கள், கோபம் என பல விதங்களில் பாதிக்கப்படுவார்.
கேது பகவான் ஏற்கனவே கன்னியில் இருந்த நிலையில், சூரிய பகவான் கன்னியில் நுழைந்த நாள் முதலே பிரச்சனை துவங்கிவிட்டது. இந்த நிலைஐ மாறும் வரை பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கும். பணத் தேவையும் பணப் பிரச்சினையும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ