karma karagan: ஏழரையா? கண்டச்சனியா? சனி மகாதசை என்றாலும் பரிகாரம் அவசியம்

Ezharai Nattu Sani Troubles: வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் சனீஸ்வரருக்கு பிடிககாத ராசிகள் என சில உண்டு. அந்த ராசியை சேர்ந்தவர்கள், பரிகாரம் செய்து நிம்மதி தேடலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 2, 2023, 02:23 PM IST
  • வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் சனீஸ்வரர்
  • சனீஸ்வரருக்கு பிடிககாத ராசிகள்
  • சனிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்
karma karagan: ஏழரையா? கண்டச்சனியா? சனி மகாதசை என்றாலும் பரிகாரம் அவசியம் title=

சனி தேவன் நீதியின் கடவுள் மற்றும் கர்மாவை வழங்குபவர் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்களுக்கு அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி தேவன் மிகவும் மெதுவாக நகர்கிறார் மற்றும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழைவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும். அதாவது சுமார் இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் இருப்பார். இதன் போது ஒருவரது ஜாதகத்தில் அவர் சுப ஸ்தானத்தில் இருந்தால் அளவற்ற மகிழ்ச்சியைத் தருவார். மறுபுறம், அவர்கள் அசுபமாக இருப்பதால், வாழ்க்கையில் ஒரு மலையளவு பிரச்சனைகளை உருவாக்குவார்.

சனிக்கு எதிரியாகும் ராசிக்காரர் என்றும், அவருக்கு பிடித்த ராசிகள் என்று பார்த்தால் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், அவரவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருவதால் தான் அவர் சனீஸ்வரர் என ஈஸ்வரப் பட்டம் பெற்றுள்ளார். கும்பம், துலாம். மகரம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி என்பதால், அந்த ராசிகளை சனி பகவானுக்கு பிடித்தவை என்று சொல்லிக் கொள்ளலாம்..

இது தவிர மீனம் மற்றும் தனுசு ராசிகளின் அதிபதியான தேவகுரு வியாழன் சனியின் நண்பர் என்பதால், அவற்றையும் சனீஸ்வரருக்கு பிடித்தமானவை என்று மக்கள் நினைக்கின்றனர்.

மேலும் படிக்க | காதலுக்கு ஜே சொல்ல வருகிறார் மேஷத்தில் சுக்கிரன்! வாழ்க்கையை இனிப்பாக்கும் சுக்கிரப் பெயர்ச்சி

ஆனால், உண்மையில், ஒருவரின் ஜாதகத்தில் சனி நீசமாகவோ, பகையாகவோ இருந்தால், அவரின் வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். பல முறை முயற்சி செய்தே வெற்றி பெற வேண்டியதாக இருக்கும்.

துன்பங்களை அனுபவிக்க நேரிடும். மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால் மட்டுமே, அவருக்கு சாதகமான பலன்கள் எளிதாக கிடைக்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்வார்.

ஜன்ம ராசிக்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும். ஏழரை வருடத்தை இரண்டரை, இரண்டரை ஆண்டுகளாக பிரிக்கப்படுகிறது. அதில் முதல் பாகத்தை மங்கு சனி என்றும், இரண்டாவதை தங்கு சனி என்றும், மூன்றாவது பாகத்தை பொங்குசனி என்றும் ஜோதிடர்கள் அழைகின்றனர்.

சனிபகவான் ஒரு மனிதனுக்கு ஆயுள் ஆதிக்கம் செய்யக்கூடியவர். அதனால் தான் இவரை ஆயுள் காரகன் என போற்றப்படுகிறார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதற்கும், அகால மரணம் உண்டாக காரகன் சனீஸ்வரன் தான். ஆனால், இவை அனைத்துமே நாம் செய்யும் நன்மை தீமைகளின் அடிப்படையில் ஒரு நீதிபதியாக நின்று நீதி வழங்கும் செயல் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News