புதன் அஸ்தமனம் ... வேலையில், தொழிலில் சிக்கல்களை எதிர்கொள்ளும் 6 ராசிகள்!

Effects of Budh Ast: ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். அறிவாற்றல், பேச்சுத்திறன், மற்றவர்களை வசப்படுத்தும் திறன், ஆகிய குணங்களை கொடுக்கும் காரணியாக புதன் இருக்கிறார். புதனின் அருள் இல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவது சாத்தியம் இல்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2024, 04:17 PM IST
  • ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார்.
  • புதனின் அருள் இல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவது சாத்தியம் இல்லை.
  • ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, 10:36 மணிக்கு, மேஷ ராசியில் புதன் அஸ்தமிக்கிறார்.
புதன் அஸ்தமனம் ... வேலையில், தொழிலில்  சிக்கல்களை எதிர்கொள்ளும் 6 ராசிகள்! title=

Effects of Budh Ast, Budhan Peyarchi:ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். அறிவாற்றல், பேச்சுத்திறன், மற்றவர்களை வசப்படுத்தும் திறன், ஆகிய குணங்களை கொடுக்கும் காரணியாக புதன் இருக்கிறார். புதனின் அருள் இல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவது சாத்தியம் இல்லை. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, 10:36 மணிக்கு, மேஷ ராசியில் புதன் அஸ்தமிக்கிறார். புதனின் இந்த அஸ்தமனத்தினால், ஆறு ராசிகளுக்கு வேலையில் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும்.

மேஷ ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

மேஷ ராசியினருக்கு புதனின் அஸ்தமனத்தால், தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலை பளு காரணமாக மன அழுத்தம் அதிகமாகும். வேலையை மாற்றும் எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றும். எனினும் கவலைப்பட தேவையில்லை. நம்பிக்கை வைத்து கவனமாக முடிவுகளை எடுப்பதன் மூலம், தடைகளை வெல்லலாம். முதலீடு செய்யும் முன் நன்றாக கலந்தாலோசிக்கவும்.

மிதுன ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

மிதுன ராசியினருக்கு புதனின் அஸ்தமனம், வாழ்க்கையில் பல சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். எதிர்மறை எண்ணங்களால் மனதில் சோர்வு ஏற்படும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். எனினும் புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தின் காரணமாக பிரச்சனையை எளிதாக சமாளித்து விடுவீர்கள்

கடக ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

கடக ராசியினருக்கு புதனின் அஸ்தமனம் காரணமாக வேலையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் திருப்தி அடையாமல் போகலாம். இதனால் உங்களுக்கு மனசோர்வு ஏற்படலாம். வேலையை மாற்றலாம் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும். எனினும் நம்பிக்கையோடு இருக்கவும்.

கன்னி ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

கன்னி ராசியினருக்கு புதன் அஸ்தமனம் காரணமாக பணியிடத்தில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். நீங்கள் திட்டமிட்ட வேலை சரியாக நடக்காமல், காலை வாரி விடலாம். எனினும் தன்னம்பிக்கையே இழக்காமல், உங்கள் வேலையை தொடரவும். பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்பட்டு உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

விருச்சிக ராசியினருக்கு புதனின் அஸ்தமனம் கெடு பலன்களை கொடுக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். பணி அழுத்தம் காரணமாக, வேலையை விட்டு விடலாம் என்ற எண்ணம் கூட தோன்றும். மூத்த அதிகாரிகள் உடனான உறவு பாதிக்கப்படும். எனினும் தன்னம்பிக்கை இழக்காமல், உங்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்யும் பட்சத்தில், விரைவில் அதற்கான பலன்கள் கிடைக்கும். முதலீடு செய்யும் முன் நன்றாக யோசித்து செய்யவும்.

மேலும் படிக்க | மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள், குபேர யோகம் ஆரம்பம்

மகர ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

மகர ராசிக்கு புதனின் அஸ்தமனம் காரணமாக, வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு பெறுவது கடினமாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்காது. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காது.

தனுசு ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

தனுசு ராசியினருக்கு, புதனின் அஸ்தமனம், வாழ்க்கையில் சோதனையான காலகட்டத்தை கொடுக்கும். மன அழுத்தம் அதிகமாக இருக்கலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். மேலதிகாரியின் அதிர்ச்சியை சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. எனவே வேலையில் எச்சரிக்கையாக இருக்கவும். கவனமாக இருந்தால் பல பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Sun Transit 2024: சூரியபெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News