பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சயம் பெருக நம் வீடு எப்பொழும் மங்களகரமாக வைத்திருக்க வேண்டும். அதாவது வீட்டின் வாசலில் கோலமிட்டு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஏனெனில் லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் செல்வ வளம் மட்டுமல்லாது பதினாறு பேறுகளை பெறலாம். இந்த உலகத்தில் லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினாள் என்றால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும். எனவே உங்களின் வீட்டில் லட்சுமி கடாட்சம் தழைத்து செல்வம் பெருக இந்த நடைமுறைகளை பின்பற்றுங்கள்..!
தாமரை மலரை வழங்குங்கள்
பொதுவாக தாமரை மலர் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த மலராகும். ஏனெல் இந்த பூவில் தான் லக்ஷ்மி தேவி அமர்ந்திருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே வெள்ளிக்கிழமை அன்று ஒரு பாதத்தில் லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலரை சமர்பித்தால், அவரது ஆசிகள் முழு குடும்பத்தின் மீதும் பொழியும். இதனுடன், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு இரண்டுமே அதிகரிக்கும்.
மேலும் படிக்க | புதன் கொடுக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்! பணத்தில் புரளும் 4 ராசிகள்
வீட்டில் எப்போதுமே விளக்குமாறு இருக்க வேண்டும்
துடைப்பம் வீட்டில் உள்ள அழுக்குகளை அகற்றி, அதை சுத்தமாக பயன்படுத்தப்படுகிறது. இது லட்சுமி தேவியின் சின்னமாக கருதப்படுகிறது. துடைப்பம் இருக்கும் வீட்டில் லட்சுமி தேவி வசிக்கிறார் என்பது ஐதீகம். இருப்பினும், இரவில் ஒருபோதும் சுத்தம் செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
துளசி செடி நட்டு வைக்கவும்
வாஸ்து சாஸ்திரத்தில் துளசிக்கு மிகவும் புனிதமான இடமுண்டு. அதேபோல் துளசி செடியில் லட்சுமி தேவி வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே, லட்சுமி தேவி உங்கள் வீட்டில் தங்க வைக்க, இன்றே உங்கள் வீட்டில் துளசி செடியை நடவும். மேலும் தினமும் மாலையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
வீட்டின் கோவிலில் சங்கு வையுங்கள்
கடல் கொந்தளிக்கும் போது, அன்னை லட்சுமியும் சங்கும் ஒன்றாகப் பிறந்தனர் என்பது ஐதீகம். இந்த சூழலில், சங்கு லட்சுமி தேவியின் சகோதரனாக கருதப்படுகிறது. இதனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி , சங்கு இருக்கும் வீட்டை விட்டு அன்னை லட்சுமி வெகுதூரம் செல்ல முடியாது என்பது ஐதீகம்.
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ