துலாமில் இணையும் மூன்று கிரகங்கள்; பிரச்சனையில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், புதனும் துலாம் ராசிக்கு செல்வதால் ஏற்படும் இந்த கிரக சேர்க்கையினால், சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 25, 2022, 07:12 PM IST
  • நிதி நிலை பாதிக்கக் கூடும். செலவுகள் அதிகரிக்கும்.
  • சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் வரலாம்.
  • கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
துலாமில் இணையும் மூன்று கிரகங்கள்; பிரச்சனையில் சிக்கும் ‘சில’ ராசிகள்! title=

Mercury Transit: அக்டோபர் 26ம் தேதி புதன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அக்டோபர் 26க்கு பிறகு புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். கன்னி ராசியில் ஆட்சியில் உச்சம் பெற்றிருந்த புதன், அக்டோபர் 26க்குப் பிறகு துலாம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், புதனும் துலாம் ராசிக்கு செல்வதால் ஏற்படும் இந்த கிரக சேர்க்கையினால், சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேஷம்:

புதன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையை பாதிக்கக் கூடும். செலவுகள் அதிகரிக்கும். சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. எடுத்த காரியம் நிறைவேறாததால் ஏமாற்றம் ஏற்படும். திடீரென்று தடைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டில் சச்சரவுகள் வரலாம்.

விருச்சிகம்:

இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் சாதகமற்ற சூழல் உருவாகும். செலவுகளில் மிகவும் கவனமாக இருக்கவும். பண பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்கவும். மன மற்றும் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம்.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

கும்பம்:

கும்பம் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களுடனான உறவிலும் பிரச்சனைகள் வரலாம். உங்கள் தொழிலில் கவனமாக இருங்கள். குறிப்பாக மற்றவர்களின் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம், இல்லையெனில் இழப்பு ஏற்படலாம்.

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண் சம்பந்தமான சில பிரச்சனைகள் வரலாம். தூசி நிறைந்த இடங்களுக்கு செல்வதை இப்போதைக்கு தவிர்க்கவும். ஏனெனில் இது ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். தொழில்-வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். வருமானம் குறையும், செலவுகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News