குரு அஸ்தமனம் 2023. வேத ஜோதிடத்தில், குரு பகவான், திருமணம், சந்ததி, அதிர்ஷ்டம், செல்வம், ஆன்மீக வேலை மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை ராசிகளுக்கு சுபமாக கருதப்படுவதில்லை. அந்த வகையில், குருவின் அஸ்தமன நிலையும் எந்த ராசிக்கும் சாதகமாக கருதப்படுவதில்லை.
திருமணம், நிச்சயதார்த்தம், பெயர் சூட்டுதல் போன்ற சுப மற்றும் மங்களகரமான வேலைகள் குருவின் இந்த நிலையின் போது செய்யப்படுவதில்லை. ஏப்ரல் 22 முதல், வியாழன் கிரகம் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளது. ராசி சக்கரத்தின் 12வது ராசியாகும் மீனம்.
மீனம் அமைதி, தூய்மை, தனிமை மற்றும் ஒரு சாதாரண நபருக்கு எட்டாத இடங்களைக் குறிக்கிறது. மறுபுறம், மேஷத்தின் தன்மை முற்றிலும் எதிர்மாறானது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். மேலும் இது ராசிகளில் முதலில் வரும் ராசியாகும். இந்த நிலையில், குருவின் அஸ்தமனம் மேஷம் மற்றும் மீன ராசிக்காரர்களின் மீது விசேஷ பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குரு அஸ்தமனம்: ராசிகளில் அதன் தாக்கம்
கும்பம்
கும்ப ராசியினருக்கு வியாழன் 2ம் மற்றும் 11ம் வீட்டிற்கு அதிபதி. குரு பகவான் மீன ராசியில் இரண்டாம் இடத்திலும், அதன்பின் மூன்றாம் வீட்டில் மேஷ ராசியிலும் அஸ்தமனமாவார். மீனத்தில் குரு இருக்கும் காலத்தில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த காலத்தில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம். வீட்டுச் செலவுகள் காரணமாக உங்களால் முதலீடு செய்ய முடியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுவது நல்லது. இந்த நேரத்தில் உங்களால் நிதி நிலை தொடர்பான எந்த பெரிய முடிவுகளையும் எடுக்க முடியாது.
மேலும் படிக்க | கஜகேசரி யோகத்தினால் ஆண்டு முழுவதும் அபரிமிதமான செல்வம் பெறும் ‘சில’ ராசிகள்!
நிதி முடிவையும் எடுக்க முடியாது. கும்ப ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் குரு மந்திரம் மற்றும் காயத்ரி ஏகாக்ஷரி பீஜ மந்திரமான 'ஓம் பிருஹஸ்பதயே நம' ஆகியவற்றை ஜபிக்க வேண்டும்.
மீன ராசிக்காரர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்
மீன ராசிக்கு குரு பகவான் லக்னம் மற்றும் 10ம் வீட்டிற்கு அதிபதி ஆவார். வியாழன் லக்ன வீட்டில் அஸ்தமித்து அதன் பிறகு மேஷத்தின் இரண்டாம் வீட்டில் அஸ்தமிப்பார். மீன ராசிக்கு வியாழன் அதிபதியாக இருப்பதால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. உடல்நலக்குறைவு காரணமாக, நீங்கள் தொழில் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.
பரபரப்பான வேலை காரணமாக குடும்பத்திற்கு குறைந்த நேரத்தையே கொடுக்க முடியும். இந்த காலகட்டத்தில் பேச்சில் அதிக கவனம் தேவை. மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. அதிக ஆக்ரோஷத்தையும் கோவத்தையும் தவிர்ப்பது நல்லது. மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வச்செழிப்பு அதிகரிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ