மகாசிவராத்திரி 2023 பூஜை: மகாசிவராத்திரி மிகுந்த பக்தி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாதேவனையும் அன்னை பார்வதியையும் பக்தியுடன் வழிபடும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி தினத்திற்காக சிவ பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 18ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்று சிறப்பான போகம் உருவாகும் நிலையில், சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் ஏழரை சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த நாளில் பக்தர்கள் முழுமையான பக்தி உணர்வுடன் சிவனை வழிபடுகின்றனர். மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவபெருமானின் கருணையை பெறலாம். மஹா சிவராத்திரி நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் சதுர்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு. இம்முறை மகாசிவராத்திரியில் ஒரு தெய்வீக மற்றும் அபூர்வ தற்செயல் நிகழ்வு நடைபெறுகிறது. பிப்ரவரி 18 அன்று சனி மற்றும் சூரியன் தவிர, சந்திரனும் கும்ப ராசியில் அமர்ந்திருப்பார். கும்ப ராசியில் சனி, சூரியன், சந்திரன் கூடும் போது திரிகிரஹி யோகம் உருவாகும்.
இது தவிர, சனி பிரதோஷ விரதமும் மகாசிவராத்திரியில் ஒன்று கூடி மாறி வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சனி திசை மற்றும் ஏழரை நாட்டு சனியில் பாதிப்பில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள் செய்வது மிகவும் பலன் தரும். ஏழரை நாட்டு சனி பாதிப்பால அவதிப்படுபவர்கள் இந்த நாளில் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்ய வேண்டும். இது ஏழரை நாட்டு சனியின் பாதிப்ப்பை குறைக்கும்.
சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், மஹாசிவராத்திரி அன்று அரச மரத்திற்கு நீர் ஊற்றி வழிபட படைப்பதும் பலன் தரும். ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாசிவராத்திரி நாள் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் நீங்கள் சிவபெருமானையும், அனுமனையும் நினைத்து வணங்க வேண்டும்.
மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய - ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கைமகாசிவராத்திரி நாளில் சிவபுராணம் ஓதுதல் மற்றும் மஹாமிருத்யுஞ்சய மந்திரம் ஓதுதல் அவசியம்.
முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார். ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.
மேலும் படிக்க | Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ