குரு-செவ்வாய் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை கொட்டும்

Guru Mars Yuti 2024: இன்று குரு பூர்ணிமா நாளில் ரிஷப ராசியில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தரப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 21, 2024, 06:10 PM IST
  • பேச்சில் தெளிவு இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • மிகப்பெரிய ஆசைகள் நிறைவேறும்.
  • தந்தையுடனான உறவு மேம்படும்.
குரு-செவ்வாய் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை கொட்டும் title=

Jupiter Mars In Taurus: ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெயர்ச்சி அடைந்து மற்றொரு ராசிக்கு மாறும். அதன்படி ஜூலை 12 அன்று, செவ்வாய் ரிஷப ராசிக்கு மாறினார். குரு ஏற்கனவே இந்த ராசியில் பயணித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ரிஷப ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகி வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணிக்கும். இந்த சேர்க்கை சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. மேலும் ஜோதிடத்தின் படி குரு மற்றும் செவ்வாய் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே, இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது பல ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும். எனவே அந்த ராசிகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): ஜோதிட சாஸ்திரப்படி, குரு பூர்ணிமா தினத்தில் சிறப்பு நாளில், செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில், குரு மேஷ ராசியின் அதிர்ஷ்ட வீட்டிற்கு அதிபதி. மேஷ ராசிக்காரர்களின் செல்வ வீட்டில் இந்த இரண்டு கிரகங்களும் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வேலையில் நல்ல மாற்றத்தை பெறுவீர்கள். விரும்பிய சலுகையை பெறலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பேச்சில் தெளிவு இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களின் லாப வீட்டில் குரு - செவ்வாய் சேர்க்கை நடந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு கிரகங்களின் தாக்கத்தால், பல தடைபட்ட வேலைகள் இப்போது நிறைவேறும். இந்த நேரத்தில் குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். இதுமட்டுமின்றி நிதி நிலை வலுவடையும். வங்கி இருப்பு அதிகரிக்கும். அதே சமயம் பயணங்களால் சாதகமான பலன் பெறலாம். மிகப்பெரிய ஆசைகள் நிறைவேறும்.

மேலும் படிக்க | Jupiter Retrograd Transit: குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்

சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். பல வழிகளில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். குரு மற்றும் செவ்வாய் கிரகத்தின் சேர்க்கையால் பணியிடத்தில் நன்மை உண்டாகும். போட்டித் தேர்வில் நல்ல பலன்கள் கிடைக்கும். தந்தையுடனான உறவு மேம்படும்.

கன்னி (Virgo Zodiac Sign): இந்த சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதே நேரத்தில், நீங்கள் தொழிலில் பெரிய ஒப்பந்தத்தைப் பெறலாம். வேலையில் சில மாற்றங்கள் காணப்படும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகள் மூலம் நல்ல நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Lord Saturn: சனி பகவான் துணை இருப்பார்... கவலை வேண்டாம் மேஷ ராசியினரே..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News