குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம்

Guru Uday 2023 in Mesh Rashi: மேஷ ராசியில் குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயம் ஹம்ச ராஜயோகத்தை உருவாக்கியது. இந்த ஹம்ச ராஜயோகம் சிலருக்கு அபரிமிதமான செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2023, 03:59 PM IST
  • ஹம்ச ராஜயோகம் சிலருக்கு வரப்பிரசாதமாக அமையும்.
  • நீண்ட நாள் வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
  • வருமானம் அதிகரிக்கும்.
குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம் title=

மேஷ ராசியில் குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயம் 2023: கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியையும் இயக்கங்களையும் மாற்றுகின்றன. வியாழன் கிரகனும் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றும். குரு பகவானாகிய வியாழன் கிரகம், அதிர்ஷ்டம், திருமணம் மற்றும் மகிழ்ச்சிக்கான காரணியாக கருதப்படுகின்றது. 2023-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி குரு பகவான் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதன்படி தேவகுரு பிருஹஸ்பதி ஒரு ராசி சுழற்சியை முடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் நுழைந்தார். அதேசமயம் ஏப்ரல் 27 ஆம் தேதி குரு உதயமானார். குருவின் உதயத்தால் சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஹன்ஸ் ராஜ யோகத்தை உருவாக்கும். எனவே குரு உதயினால் உருவாகும் ஹன்ஸ் ராஜ யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஹம்ச ராஜயோகம் என்றால் என்ன?
பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகம் குரு பகவானால் ஏற்படுவது ஆகும். ஒருவரது சுய ஜாதகத்தில் குரு கேந்திர ஸ்தானத்தில் அதாவது 1,4, 7, 10 ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். அது குருவின் சொந்த வீடுகளான தனுசு மீனம் அல்லது உச்ச வீடான கடகம் ஆகிய ராசிகளாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விதிகளின்படி குரு அமைந்திருந்தால் அது ஹம்ச யோகமாகும்.

மேலும் படிக்க | குரு உதயம்: இந்த யோகத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

இப்போது அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு ஹம்ச ராஜயோகம் அதிர்ஷ்டத்தைத் தரும். பணி இடத்தில் சிறப்பாகச் செயல்படுவீர்கள், மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு- சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் அமையும். சிலரது வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். வியாபாரத்திலும் பண ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக மெற்கொள்வீர்கள். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும்.

தனுசு ராசி: ஹம்ச ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களை அள்ளித் தரும். திடீர் பண ஆதாயம் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு லாபம் ஈட்டுவீர்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க நினைத்தவர்களின் கனவு நிறைவேறும். கல்வித் துறையில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்கள் அமைவார்கள்.  

மீனா ராசி: இந்த ராசிக்காரர்கள் குருவின் உதயத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கும். தொழில், வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுங்கள். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள்..! சூரிய பகவானின் அருளால் செல்வம் கிடைக்கும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News