கன்னியில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Venus Transit: சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகும். இவர்களுக்கு வெற்றிகள் கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 4, 2023, 01:25 PM IST
  • சுக்கிரனின் இந்த பெயர்ச்சி கன்னி ராசியில் நடந்துள்ளது.
  • ஆகையால், இந்த ராசிக்காரர்கள் அனைவரையும் விட அதிகப் பலன்களைப் பெறப் போகிறார்கள்.
  • உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னியில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: சுக்கிரன் ஆற்றல், அழகு மற்றும் அன்பின் காரணியாக கருதப்படுகிறார். ஒரு நபரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் திருப்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும், கூர்மையான புத்திசாலித்தனத்தையும் பெறுகிறார். நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 04:58 மணிக்கு சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆனார். 

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் பெயர்சியும் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகும். இவர்களுக்கு வெற்றிகள் கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். பண வரவு சாதகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிர பெயர்ச்சியால் பல வித நன்மைகளை அடையவுள்ள ராசிகள் 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பானதாக இருக்கும். வாழ்வில் அமைதி நிலவும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி இப்போது கிடைக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். சுக்கிரனின் செல்வாக்கு வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுன ராசி (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தொழில், பணம் மற்றும் உறவுகளில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். ஆன்மிக நடவடிக்கைகளில் நீங்கள் நாட்டம் காட்டலாம். இந்த பெயர்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழில் துறையில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும், இது உங்களுக்கு திருப்தியைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் துறையில் புதிய தொடர்புகள் உருவாகும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். ஏதேனும் சட்ட தகராறு இருந்தால், அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி நல்ல பலனைத் தந்துள்ளது. சுக்கிரனின் இந்த நிலை உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மங்களத்தையும் தரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கன்னி ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிகமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான நன்மைகளை அள்ளித்தரும். உங்கள் தொழில் சம்பந்தமாக இருப்பிட மாற்றத்தையும் சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் திருப்தி கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் அடைவீர்கள்.

கன்னி ராசி (Virgo)

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி கன்னி ராசியில்தான் நடந்துள்ளது. ஆகையால், இந்த ராசிக்காரர்கள் அனைவரையும் விட அதிகப் பலன்களைப் பெறப் போகிறார்கள். உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். கன்னி ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைத் தந்துள்ளது. உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள். உங்களின் சம்பளம் உயரும் வாய்ப்பும் உள்ளது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

மேலும் படிக்க | காதலர்களுக்கும், கணவன் மனைவிக்கும் மனத்தாங்கலை ஏற்படுத்தும் சனி வக்ர நிவர்த்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News