சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 1 மாத காலம் சூறாவளியா இருக்கும்.. கவனமா இருக்கணும்

Shukra Gochar: சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இதனால் 3 ராசிக்காரர்கள் மீது அதிகப்படியான பாதிப்பு இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2023, 02:01 PM IST
  • சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களின் எதிரிகள் பலம் பெறத் தொடங்குவார்கள்.
  • இந்த காலத்தில் உங்களுக்கு வருத்தம் மேலோங்கக்கூடும்.
  • உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 1 மாத காலம் சூறாவளியா இருக்கும்.. கவனமா இருக்கணும் title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: மிக முக்கியமான கிரகங்களில் சுக்கிரனும் ஒன்றாகும். மே 30 அன்று, சுக்கிரன் கடகத்தில் பெயர்ச்சியாகவுள்ளார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இதனால் 3 ராசிக்காரர்கள் மீது அதிகப்படியான பாதிப்பு இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

சுக்கிரன் மே 30 அன்று இரவு 7.39 மணிக்கு கடக ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். இங்கு அவர் ஜூலை 7 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின்னர் அவர் சூரியனுக்குச் சொந்தமான சிம்ம ராசிக்குள் நுழைவார்.

கடகத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் மிதமான விளைவுடையதாக கருதப்படுகிறது. சுக்கிரனின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். எனினும், இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களை அதிகம் தொந்தரவு செய்யும். சுக்கிரனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

துலா ராசி:

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் நடக்கும். இந்த பெயர்ச்சி  உங்கள் பணியிடத்திற்கு சாதகமாக இருக்காது. இந்த நேரத்தில், நீங்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். இந்த காலத்தில் உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மூத்த அதிகாரிகளிடமும் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதிலும் தடை ஏற்படலாம். இந்த ராசியை  சேர்ந்தவர்கள் வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு அத்தனை நல்லதாக இருக்காது. இதன் காரணமாக உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியமும் மோசமடையக்கூடும்.

மேலும் படிக்க | 38 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு திடீரென்று பெரிய வெற்றி கிடைக்கும்

தனுசு ராசி: 

தனுசு ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சியாகிறார். இது உங்கள் நிதி நிலையை பாதிக்கலாம். இந்தக் காலகட்டத்தில், ரகசியமாகச் செலவு செய்யும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வசதிக்காக ரகசியமாகச் செலவு செய்வது உங்களுக்குப் பிற்காலத்தில் சிரமத்தைத் தரும். இந்த நேரத்தில், நீங்கள் எந்த நெறிமுறையற்ற வேலைகளையும் செய்யக்கூடாது. இல்லையெனில் நீங்கள் உங்கள் மரியாதையை இழக்க நேரிடும். ஆகையால் நன்மதிப்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 

தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை சச்சரவுகள் வரலாம். கடகத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் சில பாதகமான சூழ்நிலைகளை கொண்டு வரலாம். பணியிடத்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது உங்களுக்கு பல வித தொந்தரவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் பணத்தை முதலீடு செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தும், தீங்கு விளைவிக்கும்.

கும்ப ராசி:

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களின் எதிரிகள் பலம் பெறத் தொடங்குவார்கள். இந்த காலத்தில் உங்களுக்கு வருத்தம் மேலோங்கக்கூடும். உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. இந்த நேரத்தில் உங்கள் சக ஊழியர்கள் சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, நீங்கள் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமானதாக கருதப்பட முடியாது. உங்கள் உடல் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான காரமான உணவைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். சொத்து விஷயங்களால் சில சர்ச்சைகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆகையால், இந்த நேரத்தில் அனைத்து விதமான விவாதங்களில் இருந்தும் விலகி இருங்கள். இந்த காலத்தில் உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அமாவாசை அன்று சனி ஜெயந்தி விரதம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News