குரு வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், அஸ்தமன மற்றும் உதய நிலைகள் அனைத்தும் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை மட்டுமல்லாமல் கிரகங்களின் இயக்க திசைகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் நேராகவும் தலைகீழாகவும் பயணிக்கும். கிரகங்களின் நேரான இயல்பான பயணம் மார்கி எனவும் எதிர் திசையில் பயணிப்பது வக்ரி எனவும் அழைக்கப்படுகின்றன.
தேவ குரு வியாழன் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். பல வித நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகமாக அவர் பார்க்கப்படுகிறார். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், திருமணம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டால் அவர் வாழ்வில் அனைத்து வித சந்தோஷங்களையும் பெறுகிறார். தற்போது வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார்.
குரு வக்ர நிலை
செப்டம்பரில், குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைவார். இந்த மாற்றத்துடன் அவர் மீன ராசியில் நுழைவார். 4 செப்டம்பர் 2023 அன்று காலை 9:15 மணிக்கு குரு வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.
ராசிகளில் அதன் தாக்கம்
குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களையும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் கொண்டு வரும். எனினும், குருவின் வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்களை அள்ளித்தர உள்ளது. இது இவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
குருவின் வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை பற்றி இங்கே காணலாம்:
மேஷ ராசி
குரு பகவானின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்கு நன்மை பயக்கும். அது அவர்களின் வாழ்வில் நல்ல பலன்களைத் தரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கிடைக்கும். இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. மறுபுறம், செப்டம்பர் மாதத்தில், மேஷ ராசிக்காரர்கள் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். பண ஆதாயம் அதிகம் இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதே நேரத்தில், புதிய வேலைக்கான தேடலும் நிறைவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப செலவுகள் இருக்கும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அமோக ராஜயோகம்
கடக ராசி
குருவின் வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் வியாழன் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். கடக ராசிக்காரர்களுக்கு மரியாதை, கௌரவம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணம் திரும்ப கிடைக்கும். பணி இடத்தில் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் வக்ர பெயர்ச்சி வேலையில்லாதவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். இப்போது நல்ல வேலை கிடைக்கலாம். தந்தையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.
மிதுன ராசி
குருவின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவரது மாற்றம் வருமான வீட்டில் நடைபெறுகிறது. மேலும், அவர் ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். அத்தகைய சூழ்நிலையில் வருமானம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். அதே சமயம் வாழ்க்கை துணைக்கும் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் ஆதாயங்களைப் பெறலாம். முதலீட்டில் லாபம் கிடைக்கும். காதல் உறவில் நல்ல நிலை இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சொத்து வாங்கும் யோகம் தற்போது உள்ளது. இது தவிர, பங்குச்சந்தையின் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம். திருமண தடை நீங்கி திருமணம் நிச்சயம் ஆகி நடக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... அட்டகாசமான நற்பலன்கள் கைகூடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ