கன்னிக்கு சுக்கிரன் போனால், பார்லர் செலவு அதிகரிக்கும்? உங்க ஆளு ராசி என்ன? கன்னி இல்லையே??

Virgo Venus Bad Effects : கன்னியில் சுக்கிரன் சஞ்சரிப்பது, பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை உருவாக்கும் என்றாலும் சுக்கிரனால் அதிக பாதிப்பு யாருக்கு என்பது தெரியுமா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2024, 06:50 PM IST
  • சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறிய சுக்கிரன்
  • சுக்கிரன் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள்
  • கன்னியில் சுக்கிரன் பாதிப்பு யாருக்கு அதிகம்?
கன்னிக்கு சுக்கிரன் போனால், பார்லர் செலவு அதிகரிக்கும்? உங்க ஆளு ராசி என்ன? கன்னி இல்லையே?? title=

சிம்ம ராசியில் சஞ்சரித்து வந்த சுக்கிரன், இன்று கன்னி ராசிக்கு பெயர்ச்சியானார். அழகு, புகழ், பிரபலம், தோற்றத்துக் காரணமான சுக்கிரனின் இந்த சஞ்சாரம், பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை உருவாக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறிய சுக்கிரனால் பலருக்கு நன்மை என்றாலும், சுக்கிரன் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள் என்றால் அதில் 5 ராசிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. கன்னியில் சுக்கிரன் பாதிப்பு யாருக்கு அதிகம்? தெரிந்துக் கொள்வோம்.

கன்னியில் சுக்கிரன் சஞ்சாரம் : ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி கவலையைத் தரும். குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து கவலைகள் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கவலை மனதை நோகடிக்கும். கன்னியில் சுக்கிரன் சஞ்சாரத்தின் போது காரியத்தடை, வீண் விரயம் என பல்வேறு விஷயங்கள் உங்களைக் கவலைப்படுத்தும். அதோடு, ஆரோக்கியத்திற்காக கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்காக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...

கன்னியில் சுக்கிரன் சஞ்சாரம் :  மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாகி நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால், நேரம் சரியில்லை என்று சொல்லலாம். குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவது, திடீர் இடமாற்றம், திடீர் செலவுகள், எதிர்பாராத உறவினர் வருகை என மனதிற்கு கவலைகளை அதிகரிக்கும் காலமாக சுக்கிரன் சன்ச்ஜாரம் இருக்கும். நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வாய்ப்பு கைநழுவுவதால், மன அழுத்தம் ஏற்படலாம்.  

கன்னியில் சுக்கிரன் சஞ்சாரம் : கடகம்

வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனையை கடக ராசிக்கு ஏற்படுத்தும் கன்னியில் சுக்கிரன் சஞ்சாரம், தொழில்ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்துவார். தொட்டதற்கெல்லாம் கால தாமதம் என்றால் என்ன செய்வது என சலிப்பு உண்டாகும். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பை சந்திக்க நேரிடலாம்.

கன்னியில் சுக்கிரன் சஞ்சாரம் : கன்னி

கன்னி ராசியில் சுக்கிரன் சஞ்சாரத்தின் போது தொழிலில் மந்தநிலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். லாபம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது திடீரென மாறி நஷ்டமாகும் சூழல் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். சுக்கிரனின் அடுத்த பெயர்ச்சி, உங்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.  

கன்னியில் சுக்கிரன் சஞ்சாரம் : மீனம்

நண்பர்கள், குடும்பத்தினருடன் மனவேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் திருப்தி இல்லாததால் வேலை மாற்றம் செய்யலாம் என்று நினைப்பு ஏற்படும். ஆனால், அவசர முடிவு ஆபத்தையே தரும். கன்னி ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது உங்களில் சிலர் வேலையை மாற்றலாம் என்றாலும், அது மனதில் பலவிதமான கவலைகளைக் கொடுக்கும். தொழில் செய்பவர்களுக்கு பணியாட்கள் அல்லது கூட்டாளிகளுடன் பிரச்சனைகள் ஏற்படலாம்.முடிந்த அளவு பொறுமையாக இருக்கவும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது உங்களுக்கு இப்போது சரியாக பொருந்தும்.

மேலும் படிக்க | விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கண்ணன் 8வது பிள்ளை! மனைவிகளும் 8! 8க்கும் கண்ணனுக்கும் என்ன தொடர்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News