கும்பத்தில் இணையும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் காலம், ஜாக்கிரதை!!

Surya Shani Yuti: ஒரே ராசியில் இரு கிரகங்களின் சேர்க்கை நடக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி மற்றும் சூரியன் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 6, 2024, 04:31 PM IST
  • சனியும் சூரியனும் ஒரே ராசியில் சேரும் இந்த காலத்தில் மீன ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
  • பிறரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல் இருப்பது நல்லது.
  • உங்கள் செலவுகளை கண்காணித்து தேவையான செலவுகளை மட்டும் செய்தால் நிதிநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
கும்பத்தில் இணையும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் காலம், ஜாக்கிரதை!! title=

Surya Shani Yuti: ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சி எனப்படும். சூரியன் பிப்ரவரி 13ஆம் தேதி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். கும்பத்தில் ஏற்கனவே சனி பகவான் இருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை நடக்க உள்ளது.

கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆவதால் 12 மாதங்களுக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு சேர்க்கை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேர்க்கையின் மூலம் சூரியனும் சனியும் ஒரே ராசியில் இருப்பார்கள்.

ஜோதிட கணக்கீடுகளின் படி கும்ப ராசி சனிபகவானின் சொந்த ராசியாக கருதப்படுகிறது. சனிக்கும் சூரியனுக்கும் இடையே தந்தை மகனுக்கான உறவு உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த இரு கிரகங்களும் நட்பு கிரகங்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரே ராசியில் இரு கிரகங்களின் சேர்க்கை நடக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி மற்றும் சூரியன் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கடகம் (Cancer)

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு உடல் நலனில் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். குறிப்பாக வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தந்தையுடனான உங்கள் உறவுகள் சற்று மோசமாகலாம். எனினும் பொறுமையை கடைப்பிடித்தால் நிலைமை சரியாகும்.  இந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம் (Leo)

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அனைத்து வித உறவுகளிலும் நிதானம் தேவை. திருமண வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள். தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதை தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளுடன் இணைந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்திலும் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது நல்லது.

மேலும் படிக்க | மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, பண வரவு

விருச்சிகம் (Scorpio)

சூரியன் மற்றும் சனிபகவானின் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.. இந்த காலத்தில் நீங்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். இதன் காரணமாக வீட்டு சூழல் அமைதி இன்றி இருக்கும். இந்த காலகட்டத்தில் அன்னையின் உடல்நலனில் அதிகப்படியான அக்கறை காட்டுங்கள். அலுவலகப் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களும் வியாபாரிகளும் பொருளாதார நிலையை கவனிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சொந்த விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம்.

மகரம் (Capricorn)

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு நஷ்டங்களை ஏற்படுத்தும். தேவையில்லாத பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு அதனால் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அழுத்தம் அதிகம் ஆகலாம். நிதிநிலை மோசமடைய வாய்ப்புள்ளது. எந்த வித பணியாக இருந்தாலும், பலமுறை யோசித்து பின்னர் செய்யவும். வாகனம் ஓட்டும்போது அதிகப்படியான கவனம் தேவை.

கும்பம் (Capricorn)

சனி சூரியன் சேர்க்கை கும்பத்தில் தான் நடக்கின்றது. இதன் காரணமாக உங்கள் உடல்நிலனில் பாதிப்பு ஏற்படலாம். மாத வருமானமும் குறையலாம். வெளியிடங்களில் இருந்து உணவை உட்கொள்வதை தவிர்க்கவும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்தினால் நிதிநிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

மீனம் (Pisces)

சனியும் சூரியனும் ஒரே ராசியில் சேரும் இந்த காலத்தில் மீன ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும்.  பிறரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் செலவுகளை கண்காணித்து தேவையான செலவுகளை மட்டும் செய்தால் நிதிநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.  ஏதேனும் பயணம் செல்லும் ஏற்பாடுகள் இருந்தால் அதை இப்போது தள்ளி வைப்பது நல்லது. உங்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருங்கள். இவர்கள் உங்களுக்கு எதிராக ஏதாவது சதி வேலைகளை தீட்டக்கூடும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News