குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை.. பொற்காலம் ஆரம்பம்!!

Guru Vakra Peyarchi: குருவின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2023, 11:44 AM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • இவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைக் காண்பார்கள்.
  • சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் தற்போது உண்டாகும்.
குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை.. பொற்காலம் ஆரம்பம்!! title=

மேஷத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மாற்றம் மிகவும் முக்கியமானது. ஒரு கிரகம் அல்லது ஒரு நட்சத்திரம் அதன் நிலையை மாற்றினால், அது 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த மாற்றங்கள் மட்டுமல்லாமல் கிரகங்களின் உதய, அஸ்தமன நிலைகளும், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகிய நிகழ்வுகளும் அதிகப்படியான ஜோதிட முக்கியத்துவத்தை பெறுகின்றன.

குரு பகவான்

தேவ குரு வியாழன் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். பல வித நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகமாக அவர் பார்க்கப்படுகிறார். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், திருமணம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டால் அவர் வாழ்வில் அனைத்து வித சந்தோஷங்களையும் பெறுகிறார். 

குரு வக்ர பெயர்ச்சி

தற்போது வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். செப்டம்பரில், குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைவார். வக்ர நிலையில் குரு மீன ராசியில் நுழைவார். 4 செப்டம்பர் 2023 அன்று காலை 9:15 மணிக்கு குரு வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். 21 ஆண்டுகளுக்கு பிறகு குருவினின் இந்த மாற்றம் நிகழவுள்ளது.

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும், குரு பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும், இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க | Astro: மற்றவர்கள் காதில் பூ சுற்றுவதில் வல்லவர்கள் ‘இந்த’ ராசிகள்!

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். கடக ராசிக்கு 6 மற்றும் 9 ஆம் வீட்டிற்கு அதிபதி வியாழன். எனவே இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்கார்ரகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆரதவு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இந்த ராசியின் ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டிற்கு குரு பகவான் அதிபதியாக உள்ளார். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவர்கள் இந்த நேரத்தில் பயனடைவார்கள். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் நிதி நிலை மேம்படும். வருமானத்தில் படிப்படியான உயர்வு இருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தனுசு ராசியின் ஐந்தாம் வீட்டில் வியாழன் வக்ரமாவதால், இவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைக் காண்பார்கள். சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். மதம் மற்றும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ராசி அதிபதி குரு பகவான் என்பதால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அனைத்து பணிகளும் எளிதாக நடக்கும்.

குரு பகவானின் பரிபூரண அருளை பெற சொல்ல வேண்டிய ஸ்தோத்திரங்கள்

குரு பிரம்மா, குரு விஷ்ணு
குரு தேவோ மகேஷ்வர
குரு சாக்‌ஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

குரவே சர்வ லோகானாம்
பிஷஜே பவ யோகினாம்
நிதயே சர்வ வித்யானாம்
ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தயே நமஹ

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 33 நாட்களில் குருவின் நிலையில் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News