ஆடி18: புதனின் ஆயில்ய நட்சத்திரத்திற்குக் மாறும் சூரியன்: பொங்கும் புதுப்புனல்

Aadi 18: புதுப்புனல் பொங்கி வரும் ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகத்தில் வெகு விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது... ஒரு மாதத்தின் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை ஆடிப்பெருக்கு மட்டுமே...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 3, 2022, 06:51 AM IST
  • ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும் ஆடி மாதத்தின் 18ம் நாள்
  • தமிழகத்தில் வெகு விமரிசையுடன் கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு
  • ஒரு மாதத்தின் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை ஆடிப்பெருக்கு மட்டுமே
ஆடி18: புதனின் ஆயில்ய நட்சத்திரத்திற்குக் மாறும் சூரியன்: பொங்கும் புதுப்புனல் title=

ஆடிப் பெருக்கு 2022: கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என 3 நட்சத்திரங்கள் உள்ளன. சனி பகவானுக்கு உரிய பூசம் நட்சத்திரத்தில் இருந்து சூரியன், புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு ஆகும். இன்று இந்த மாற்றத்தினால் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சூரியனும், புதனும் நட்பு கிரகங்களாக இருப்பதால் இந்த நாள் மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. சூரியனின் சக்தி நிறைந்த கதிர்களால், ஆடி மாதத்தில் விதைக்கப்படும் விதைகளுக்கு வலிமை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் நம்புகின்றனர். 

ஆடிப்பெருக்கு நன்னாள் இன்று. ஆடிப் பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பதினெட்டு என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள் ஆடி மாதம் 18ம் நாளை குறிக்கிறது. நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடி 18 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 'முக்கிய' பொருட்கள்

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். புதுப்புனல் பொங்கி வருவதை ஆற்றுப்பெருக்கு என்றும் அழைக்கிறோம். விவசாயத்திற்கு அடிப்படை தேவையான தண்ணீர் வரத்துக்கு அடிப்படையான மழைக்காலத்தில், ஆடி 18ம் நாளை விவசாயிகள் கொண்டாடுகின்றனர். 

ஆடி 18ம் நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய வசதியாக இருக்கும்.

மேலும் படிக்க |  Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. 

ஆற்றங்கரை அம்மன் கோவில்களில் ஆடி 18 கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி பெருக்கன்று, மக்கள் ஆறு, குளம் என இயற்கையான நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவார்கள். திருமணமான பெண்கள் தங்கள் தாலிச்சரடை மாற்றுவார்கள்.  

மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News