வீடு என்று இருந்தாலே துடைப்பம் என்ற ஒன்று இல்லாமல் இருக்காது. நம் வீடுகளில் அசால்ட்டாக எந்த இடத்தில் வேண்டுமானாலும் தென்படக்கூடியது தான் இந்த துடைப்பம். வீட்டை சுத்தம் செய்யும் வேலையை செய்யும் இந்த துடைப்பம் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் நமக்கு மன கஷ்டமும், பணக்கஷ்டமும் வராமல் இருக்கும். ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே” என்பது துடைப்பத்திற்கும் பொருந்தும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் துடைப்பத்தை நம் வீட்டில் எப்படி எல்லாம் வைத்தால் நம்முடைய பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தீரும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
மேலும் படிக்க | வெற்றி, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் நவம்பர் 4 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்
மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று தான் துடைப்பம். இதை கிராமப்புறங்களில் விளக்கமாறு என்று கூறுவார்கள். தென்னந்துடைப்பம், பூந்துடைப்பம் என்று இருந்தது போக இப்பொழுது பிளாஸ்டிக் துடைப்பம் வந்துவிட்டது. நம் இல்லங்களில் பிளாஸ்டிக் துடைப்பத்தை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்கள் காலத்தில் துடைப்பம் வைப்பதற்கு என்று ஒரு இடம் நிரந்தரமாக இருக்கும். அந்த இடத்தை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் அவர்கள் அதை வைக்க மாட்டார்கள். மேலும் அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த இடம் தெரியும். புதிதாக வருபவர்களால் துடைப்பம் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க இயலாது.
வீடு பெருக்க உபயோகப்படுத்தும் துடைப்பத்தை வீட்டிற்குள்ளும், வாசலைப் பெருக்க உபயோகப்படுத்தும் துடைப்பத்தை வீட்டிற்கு வெளியேயும் வைக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக வைக்க கூடாது. மேலும் சிலர் படிக்கட்டுகளுக்கு அடியில் துடைப்பத்தை வைப்பார்கள். அவ்வாறு வைக்கவும் கூடாது. மேலும் துடைப்பத்தை படுக்கப் போட்டது போல் வைக்கக்கூடாது. நாம் பிடிக்கும் இடம் மேலாகவும் பெருக்கும் இடம் கீழாகவும் இருப்பது போல் வட மேற்கு மூலையில் வைக்க வேண்டும். மேலும் துடைப்பத்தைக் கொண்டு யாரையும் அடிக்கக்கூடாது. அடிப்பது போல் ஓங்கவும் கூடாது. மேலும் சிலர் திட்டுவதற்காக இந்த பெயரை உபயோகப்படுத்துவார்கள். அதுவும் முற்றிலும் தவறான ஒரு செயல்.
அதேபோல் சிலர் துடைப்பத்தை காலால் எட்டி உதைப்பதும் அதை மிதிப்பதும் என்று இருப்பார்கள். அவ்வாறு செய்யவே கூடாது. இப்படி எல்லாம் செய்தால் வீட்டில் பணக்கஷ்டம் என்பது ஏற்பட்டு அதனால் மன கஷ்டமும் உண்டாகும். துடைப்பம் தேயும் வரையோ அல்லது உடையும் வரையோ உபயோகப்படுத்தக் கூடாது. மேலும் நாம் புதிதாக துடப்பம் வாங்க வேண்டும் என்றால் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளிலும் வீட்டில் இருப்பவர்களுடைய பிறந்தநாள், திருமண நாள் போன்ற நல்ல நாட்களிலும் வாங்க கூடாது. அதேபோல் வீட்டில் இருக்கும் துடைப்பத்தை வெளியில் போடுவதற்கும் இந்த நாட்களை பயன்படுத்தக் கூடாது. இப்படியான அடிப்படை விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டு கவனம் செலுத்தினால் உங்களுக்கு பணக் கஷ்டம் வராது.
மேலும் படிக்க | அள்ளி கொடுக்கும் குரு.. இந்த ராசிகளின் காட்டில் பணமழை கொட்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ