2025 Love Horoscope In Tamil : காதல் என்பது அனைவருக்கும் நினைத்த நேரத்தில் எல்லாம் அமைந்து விடுவதில்லை. அதற்கு, நேரம் காலம் என அனைத்தும் கூட வேண்டும். அப்படி அடுத்த ஆண்டு யாருக்கெல்லாம் காதல் செட் ஆகும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் அடுத்த ஆண்டு இனிப்பான காதலை சுவைப்பர். இவர்களுக்கு அடுத்த ஆண்டில் மலரும் உறவுகள் மற்றும் நினைவுகள் அனைத்தும் அழகாக இருக்கும். 2024ஆம் வருடம், உங்கள் உறவின் மீது இருந்த நம்பிக்கையை வெகுவாக சோதித்திருக்கும். ஆனால் அடுத்த வருடம் இப்படி இருக்காது. அடுத்த வருடம் உங்கள் வாழ்வில் நிலையாக இருக்கும் விஷயங்களில் காதலும் ஒன்றாக இருக்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் அடுத்த வருடம் அவர்களின் இனிய சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த வருடம் உங்கள் மனதையும் கொடுக்கும் வகையில் ஏதேனும் உறவு அமைந்திருந்தால் அது அடுத்த வருடமும் தொடராது. நிலையான உறவுகள் மற்றும் பொறுமையான அணுகுமுறைகள் மூலம் ஒரு காதல் உங்களை வந்தடையும்.
மிதுனம்:
2025 ஆம் வருடத்தில் உங்கள் காதல் பயணம் மறக்க முடியாது நினைவுகளை கொண்டதாக. நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் உங்கள் காதலில் நடைபெறும். அடுத்த ஆண்டு நீங்கள் உங்களுக்காக இருக்கும் வரை உங்கள் கையில் இருக்கும் உறவுகளையும் காத்துக் கொள்வீர்கள்.
கடகம்:
கடக ராசி காரர்களுக்கு அடுத்த வருடம் அவர்கள் ஏங்கிய பாசம், நட்பு, காதல் என அனைத்துமே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை உங்களது பார்ட்னர் தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது சில சமயங்களில் நடக்காமல் போகலாம். உங்களுக்கு உணர்ச்சி பூர்வமாக ஏற்படும் சில பிரச்சனைகள், உறவில் பூசல்களை ஏற்படுத்தலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் அடுத்த வருடம் நேர்மையான நபரை தங்களது காதல் துணையாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் உறவில் இருக்கும் நேர்மை மற்றும் நம்பிக்கையை காத்துக் கொள்வீர்கள். உங்கள் உறவு அவ்வப்போது உயரத்தையும் தாழ்ச்சியையும் சந்திக்கலாம். ஆனால் இது நெடுந்தோறும் செல்லக்கூடிய உறவு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் அடுத்த வருடம் தங்களின் உணர்ச்சிக்கு ஏற்ற ஒருவரை சந்திக்க நேரிடலாம். ஏற்கனவே உறவு இருப்பவர்கள் இதுவரை சந்தித்த இனி சந்திக்கக் கூடாது என முடிவெடுத்து, அதற்கேற்றவாறு தங்கள் உறவை மெருகேற்றுவர்.
துலாம்:
துலாம் ராசி, 2025 இல் பலவிதமான அனுபவங்களை சந்திக்க இருக்கின்றனர். இதயத்தை மகிழ்ச்சியாக்கும் உணர்வுகள், உறவுகளின் முன்னேற்றங்கள், நம்பகத்தன்மை ஆகியவை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு 2025 ஆம் வருடம் காதல் வாழ்க்கையை சில பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால், உறவில் எந்த இடையூறுகள் வந்தாலும் அதனை வளர்ச்சிக்கான ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதை வைத்து இன்னும் வளருவீர்கள். மனதையும் அறிவையும் திறந்து வைத்து உறவுகளை பற்றி புரிந்து கொள்ள நினைக்கும் நீங்கள், ஆழமான உணர்வுகள் நிறைந்த உறவுகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
தனுசு:
அடுத்த வருடத்தில் உங்களது காதல் வாழ்க்கை உங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதுவரை பிறருடன் எந்த வித ஒற்றுதரும் இல்லாமல் பழகி வந்த நீங்கள், 2025 ஆம் வருடத்தில் நம்பகமான, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு, அடுத்த வருடம் காதலில் இனிப்பான மற்றும் கசப்பான உணர்ச்சிகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் துணையுடன் இதுவரை கூற முடியாமல் இருந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உங்களுக்குள் இருக்கும் உறவு ஆழமாகலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு அவர்களது காதல் உறவில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த வருடம், உங்கள் காதல உறவை மட்டும் அன்று உங்களையும் நீங்கள் முதன்மைப்படுத்திக் கொள்ள நினைப்பீர்கள். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்து வந்த கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் நல்ல விஷயம் வந்து சேரலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இதுவரை தங்களுக்குள்ளேயே, பலவித போராட்டங்களை மேற்கொண்டு வந்திருப்பர். அதை அடுத்த வருடம் கலைந்து முன்னேற முயற்சிக்கும் இவர்கள், தங்கள் காதல் உறவிலும் முன்னேறுவர். முதல் ஆறு மாதங்கள் சிறிது கடினமான தருணங்களை கொடுத்தாலும், அடுத்த ஆறு மாதங்கள் நல்ல விஷயங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ