காலா பட கதை! உளறி மாட்டிக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!

காலா படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறிய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!

Last Updated : Jun 6, 2018, 04:35 PM IST
காலா பட கதை! உளறி மாட்டிக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்! title=

ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வர இருக்கும் காலா படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறிய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.  

இந்நிலையில், இத்திரைப்படம் நாளை திரைக்கு வருவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் ரசிகர்கள் இந்த படத்தின் வரவை ஒட்டி ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகின்றனர். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறிய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

அதில் அவர், இந்த படத்தில் அப்பாவிற்கு நிறைய ரோல் உள்ளது என்பது போல் கூறிவிட்டார். அதை தொடர்ந்து இந்த செய்தி தீயாய் பரவவும், நான் சொன்னது அப்பாவின் வாழ்க்கையில், படத்தில் இல்லை என்று சமாளித்துள்ளார். 

Trending News