Hunt Video: அழகாய் இருக்கும் உலகம் ஒரு நொடியில் மரணக்கிணறாய் மாறும் சோகம்!

Google Trending Hunt Video: கண்ணிமைக்கும் நொடியில் வாழ்வின் இறுதி அத்தியாயம் வந்துவிடும் என்பதை அதிர்ச்சியுடன் உணர்த்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 1, 2023, 09:30 AM IST
  • வாழ்வா சாவா? ஒரு நொடியில் மாறும் வாழ்க்கை!
  • அதிர்ச்சியூட்டும் வேட்டை வீடியோ
  • மரணத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் இருப்பது கண்ணிமைக்கும் நொடி
Hunt Video: அழகாய் இருக்கும் உலகம் ஒரு நொடியில் மரணக்கிணறாய் மாறும் சோகம்! title=

Viral Video: இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பதிவிடப்படும் செய்திகள் நமக்கு பல விஷயங்களை வழங்குகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் மட்டுமல்ல, நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வீடியோக்கள் அதிர்சியையும் கொடுக்கத் தவறுவதில்லை.

பல படிப்பினைகளையும் கொடுக்கும் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள், நகைச்சுவை, குறும்பு என பலவிதமான வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. வீடியோக்களில் சில ரசனைக்குரிய வீடியோக்களாக மாறி சபாஷ் என்ற பெயர் வாங்கி வைரலாகின்றன

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில், வித்தியாசமான வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. செல்லப்பிரணிகள் முதல் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் வரை நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அதிலும் இயற்கையைக் காட்டும் வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. ரவீடியோக்களுக்கு வரும் கமெண்டுகள் ‘சும்மா அதிருதில்ல’ என்ற லெவலில் வருகின்றன.

மேலும் படிக்க | பூனையுடன் விளையாடும் பாம்பு: வைரலாகும் பூனையின் மாஸ் ரியாக்‌ஷன்

வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அவை விலங்குகளின் மோதல், காதல், பாம்பு, சிங்கம் என நாம் பார்க்கவே முடியாத வீடியோக்கள் மட்டும் தானா? இல்லை படிப்பினைகளை நமக்குக் கற்றுக் கொடுக்க, நீருலகும் இருக்கிறது என்பதைக் காட்டும் வீடியோக்களும்  சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

கண்ணிமைக்கும் நொடியில் வாழ்வின் இறுதி அத்தியாயம் வந்துவிடும் என்பதை அதிர்ச்சியுடன் உணர்த்தும் வீடியோ இது. 

இந்த வீடியோவில் தெள்ளத்தெளிவான நீரில், வாழும் மீன்கள், கடல்வாழ் உயிரினங்களின் அழகுத் தோற்றத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென வந்து தாக்கி வேட்டையாடும் விலங்கு, சுறாவை காணாமல் அடித்துவிடுகிறது.

மேலும் படிக்க | Lion Hunt Video: சிங்கங்களின் இரையாக மாறிய காட்டெருமை வீடியோ வைரல்

அந்த அதிர்ச்சியை நம்பவே முடியாமால், நாம் மீண்டும் மீண்டும் அந்த கணத்தை பார்க்க, வீடியோவை பார்க்க வேண்டியிருக்கிறது. 

வீடியோவைப் பார்த்தால், கண்ணிமைக்கும் நொடியில் வாழ்க்கை மாறிவிடும் என்பது தெளிவாகப் புரிகிறது. 

ஒரு தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த நொடியோ கடலுலகம் தனது வழக்கமான இயல்பில் இயங்கத் தொடங்கிவிடுகிறது, வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்த்துகிறது. அழகாய் காட்சியளித்தாலும், அதில் அனைத்தும் காணப்படும் என்பதை உணர்த்தும் வீடியோவை ஒரு முறை பார்த்தால் போதுமா?  

மேலும் படிக்க | சாப்பிடறதைப் பார்த்து கண்ணு போடாதீங்க வயிறு வலிக்கும்! உடும்பு வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News