இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி சாருலதா படேல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி சாருலதா படேல்! 

Last Updated : Jul 3, 2019, 08:51 AM IST
இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி சாருலதா படேல்! title=

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி சாருலதா படேல்! 

உலகக்கோப்பைத் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டிக்கு நிகராக கவனம் பெற்றுள்ளார் போட்டியை காணச் சென்ற 87 வயது மூதாட்டி சாருலதா படேல். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை. இதனால் இங்கிலாந்தின் எட்க்பாஸ்டனில் நேற்று நடந்த இந்திய - வங்கதேச ஆட்டத்தை காணச் சென்றுள்ளார்.

வீல் சேரில் வந்திருந்தாலும், இந்திய அணி ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும், விக்கெட் எடுக்கும்போதும் கையில் இந்தியக் கொடியுடனும், தனது ட்ரம்பெட்டை ஊதிக்கொண்டு இந்தியாவின் ஆட்டத்தைக் கொண்டாடி கொண்டிருந்தபோது கேமராவின் கண்ணில்பட சிறிதுநேரத்திலேயே வைரலாகினார் சாருலதா பாட்டி. சோஷியல் மீடியாவில் அவர் புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாருலதா பாட்டியைச் சந்தித்து அவரிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அவரிடம் ஆசியும் வாங்கினார். இதேபோல் ரோஹித் ஷர்மாவும் அவரிடம் ஆசி வாங்கினார்.

இந்த புகைப்படங்களை விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக சாருலதா படேல் ஜி -க்கு. அவருக்கு 87 வயது. நான் பார்த்த மிக ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களில் ஒருவர் சாருலதா பாட்டி. வயது வெறும் எண் மட்டுமே. ஆர்வ-ம்தான் உங்களை எந்த எல்லையையும் தாண்டிச் செல்ல வைக்கும். சாருலதா பாட்டியின் ஆசியுடன் அடுத்த போட்டிக்கு முன்னேயுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து மூதாட்டி சாருலதா படேல் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 1983-ம் ஆண்டில் கபில்தேவ் உலகக் கோப்பையை வென்றபோது, நானும் அங்கே இருந்தேன். அதனால் இந்த முறையும் இந்தியா கோப்பை வெல்லும். இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு விளையாட வரும்போதெல்லாம், நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வேன். கடவுள் கணபதி மீது பெரிய நம்பிக்கை கொண்டவள் நான். இந்தியா வெல்லும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வீரர்களை நான் ஆசீர்வதிப்பேன்" தெரிவித்தார். 

 

Trending News