12 மணியே அடிக்காத கடிகாரம் கூட இருக்கு தெரியுமா? காரணம் காதல் தான்...யார் மீது?

ஒரு எண்ணின் மீதுள்ள காதலால் அனைத்து இடங்களிலும் அந்த எண்ணின் அம்சத்தை பிரதிபலிக்கும் ஒரு நகரம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2021, 07:53 PM IST
  • 11 என்ற எண்ணின் மீது அபார காதல் கொண்ட நகரம்.
  • சுவிட்சர்லாந்தில் உள்ளது இந்த நகரம்.
  • இங்கு கடிகாரத்தில் கூட 11 என்ற எண்ணை காண முடியாது.
12 மணியே அடிக்காத கடிகாரம் கூட இருக்கு தெரியுமா? காரணம் காதல் தான்...யார் மீது? title=

ஒரு எண்ணின் மீதுள்ள காதலால் அனைத்து இடங்களிலும் அந்த எண்ணின் அம்சத்தை பிரதிபலிக்கும் ஒரு நகரம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்!! இந்த நகரின் மக்களுக்கு 11 ஆம் எண் மிகவும் பிடிக்கும். 

இது இவர்களுக்கு ஒரு கலாச்சார அம்சமாகவே ஆகிவிட்டது. நகர் முழுவதும் 11 என்ற எண்ணின் மீதான அன்பு நமக்கு காணக்கிடைக்கிறது. 11 என்ற எண்ணின் மீதுள்ள காதலால் இங்கு கடிகாரத்தில் 12 என்ற எண்ணையே நீக்கி விட்டார்கள் என்று கூறினால் நம்ப முடியுமா? ஆனால், அதுதான் உண்மை!!

வழக்கமாக நாம் சில விஷயங்களை மிகவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் நேரத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காலம் போனால் அது மீண்டும் வராது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் உள்ளன. கடிகாரத்தில் அதை நாம் 12 மணி நேரங்களாக இரு முறை கணக்கிடுகிறோம். ஆனால் உலகில் ஒரு கடிகாரத்தில் (Clock) 12 மணியே அடிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் பின்னால் இருக்கும் உண்மையைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ALSO READ: Austria-வில் உள்ளது அமர்நாத் போன்ற பனியாலான சிவலிங்கம்: தரிசனம் பெற குவியும் பக்தர்கள்

இந்த விசித்திரமான கடிகாரம் சுவிட்சர்லாந்தின் (Switzerland) சோலோதர்னில் உள்ளது. இந்த நகரத்தின் நகர சதுக்கத்தில் ஒரு கடிகாரம் உள்ளது. அதில் 11 மணி வரை காட்டும் இலக்கங்கள் மட்டுமே உள்ளன. அதில் எண் 12 இல்லை. இங்கே இன்னும் சில கடிகாரங்களிலும் 12 மணி அடிப்பதில்லை.  

இந்த நகரத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இங்குள்ள மக்களுக்கு ‘11’ என்ற எண்ணின் மீது அதிக அன்பு உள்ளது. இங்கே உள்ள பெரும்பாலான விஷயங்களின் வடிவமைப்பு 11 என்ற எண்ணை ஒத்தாற்போல் இருக்கும். இந்த நகரத்தில் உள்ள தேவாலயங்களின் எண்ணிக்கை 11 ஆகும். இது தவிர, அருங்காட்சியகங்கள், வரலாற்று சிறப்பிமிக்க நீர்வீழ்ச்சிகள் மற்றும் கோபுரங்கள் என அனைத்தின் எண்ணிக்கையும் 11 ஆக உள்ளன.

புனித உர்சஸின் பிரதான தேவாலயத்திலும் எண் 11 இன் முக்கியத்துவத்தை தெளிவாகக் காணலாம். உண்மையில், இந்த தேவாலயம் 11 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. இங்கு மூன்று படிக்கட்டுகளின் தொகுப்பு உள்ளது. ஒவ்வொரு செட்டிலும் 11 வரிசைகள் உள்ளன. இது தவிர, 11 கதவுகள் மற்றும் 11 மணிகள் இங்கு உள்ளன.

இங்குள்ளவர்கள் 11 ஆம் எண்ணின் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் 11 வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பிறந்தநாளில் வழங்கப்படும் பரிசுகளும் 11 ஆம் எண்ணுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

நமக்கு மிகவும் பரிச்சயமானது என நாம் எண்ணும் இந்த உலகில் நம்மை அதிசய வைக்கும் இப்படிப்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் 11 என்ற எண்ணின் மீது அபார காதல் கொண்டுள்ள இந்த சுவிட்சர்லாந்து நாட்டு நகரமும் ஒன்றாகும்.

ALSO READ: Iceland: சீறும் எரிமலைக்கு முன்னால் Volleyball விளையாடும் மக்கள்; Watch Viral Video

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News