கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி! வைரலாகும் வீடியோ

கோவை கிணத்துக்கடவு பகுதியில் நடுரோட்டில் திருமணமாகி 5 நாட்களிலேயே மனைவி தனது கணவரை அடித்து உதைத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2018, 11:32 AM IST
கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி! வைரலாகும் வீடியோ title=

கோவை கிணத்துக்கடவு பகுதியில் நடுரோட்டில் திருமணமாகி 5 நாட்களிலேயே மனைவி தனது கணவரை அடித்து உதைத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருமணமாகி 5 நாட்கள் ஆகிய அந்த தம்பதியர் அருகில் உள்ள ஒரு சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்கள் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் கையில் மற்றொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருந்ததை கண்ட அந்த நபரின் மனைவி, அவரை அந்த கோவிலின் நுழைவாயிலில் வைத்தே சரமாறியாக தாக்கியுள்ளார். 

அப்போதுதான் அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரிய வந்தது இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்ற ஆத்திரத்தில் நடுரோடு என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடித்தார்.  அந்த பெண் அடிக்கும் வீடியோ காட்சி சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் திருமணமாகியிருந்தால் காவல்துறையில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணிடம் அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News