காட்டில் உள்ள விலங்கு வாழ்க்கை தினசரி சவால்களால் நிரம்பியுள்ளது. வேட்டையாட துடிக்கும் விலங்குகளிடம் இரையாகாமல் தங்களை காத்துக் கொள்ள தினமும் சில விலங்குகள் போராட வேண்டியிருக்கும். சில சமயங்களில் வலிமையான இரு விலங்குகள் மோதிக் கொள்வதை பார்க்கவே பயங்கரமானதாக இருக்கும். வல்லவன் வாழ்வான் என்ற கூற்று, காட்டு வாழ்க்கைக்கு சிறப்பாக பொருந்தும்.
காட்டில் சிறுத்தை மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்படுகிறது. வேட்டையாடுவதை பொறுத்தவரை, சிறுத்தை என்பது சிங்கத்தை விட மிக வேகமாக ஓடக் கூடியது. காட்டில் வேட்டையாடுவதுடன். சிறுத்தை நீர்வாழ் உயிரினங்களையும் தனது இரையாக ஆக்குகிறது.
அந்த வகையில் தண்ணீருக்குள் சென்று முதலையை தனது இரையாக்கும் சிறுத்தை ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை
சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றின் கரையோரம் சிறுத்தை நடந்து செல்வதைக் காணலாம். மேட்டில் அமர்ந்திருக்கும் முதலையின் மீது அவன் பார்வை விழுகிறது. சிறுத்தை தண்ணீரில் நீந்தி பின்னால் இருந்து முதலையை நோக்கி நகர்கிறது. நெருங்கி சென்றவுடன், அது முதலையின் மீது பாய்கிறது. படிப்படியாக, தனது முழு பலத்தையும் பிரயோகித்து அதனை பலியாக்குகிறார்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
ஜாகுவார் மற்றும் முதலையின் இந்த வீடியோ நேஷனல் ஜியோகிராஃபிக் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பார்த்துள்ளனர்.
மேலும் படிக்க | ‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR