Viral Video: வரலாற்று சாதனை! பனிபடர்ந்த அண்டார்டிகாவில், தறையிறங்கிய விமானம்

ஹை ஃப்ளை ஏவியேஷன் நிறுவனம், பனியால் மூடப்பட்ட அண்டார்காவில் விமானத்தை தரையிறக்கி வரலாறு படைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2021, 01:24 PM IST
Viral Video: வரலாற்று சாதனை! பனிபடர்ந்த அண்டார்டிகாவில், தறையிறங்கிய விமானம் title=

புதுடெல்லி: எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும் இடம் தான் அண்டார்டிகா (Antarctica). சாதாரண மனிதனால் எளிதில் அடைய முடியாத இடம். பனி படர்ந்த இந்த கண்டத்தில் (Icy Continent) ஒரு விமான நிறுவனம் சரித்திரம் படைத்துள்ளது. ஏர்பஸ் ஏ-340 (Airbus A-340) அண்டார்டிகாவில் தரையிறங்கி வரலாறு படைத்துள்ளது. விமான நிலையம் ஏதும் இல்லாத நிலையில், விமானத்தின் தரையிறக்கம் எங்கே, எப்படி நடந்தது? அண்டார்டிகாவில் விமானம் தரையிறங்கியது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை விட சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

அண்டார்டிகாவில் பனியைத் தவிர வேறெதையும் பார்க்க இயலாது. அதில் 290 பேர் பயணிக்கக் கூடிய ஏர்பஸ் ஏ-340 விமானம் பனி படர்ந்த ஓடுபாதையில் தரையிறங்கியது. சுற்றுலாத் துறையில் பணிபுரியும் விமான நிறுவனமான Hi Fly இதை சாத்தியமாக்கியுள்ளது.

விமானம் தரையிறங்கும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

 

தென்னாப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானம் 

Hi Fly 801 பயணிகள் விமானம் நவம்பர் 2 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து புறப்பட்டது. ஐந்து மணி நேர பயணத்திற்கு பிறகு இந்த விமானம் அண்டார்டிகாவை அடைந்தது.

ALSO READ | விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கையும் ஸ்தபித்து விடும்..!!!

கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை நடத்தப்பட்ட சோதனை

ஆண்டு முழுவதும் அண்டார்டிகாவில் பனி உறைந்து கிடக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இங்கு ஓடுபாதை தயார் செய்வதும் பெரிய பணியாக இருந்தது. முன்னதாக, 2019 மற்றும் 2020 க்கு இடையில், பல சோதனைகள் நடத்தப்பட்டன. அண்டார்டிகாவில் விமான நிலையம் இல்லை, ஆனால் இங்கு பல விமானஸ்டிரிப்கள் மற்றும் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்டார்டிகாவின் வுல்ஃப் ஃபாங் ஓடுபாதை (Wolf Fang Runway) 3 கிமீ நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்டது. ஓடுபாதை காற்று இல்லாத பனியின் அடுக்கை கொண்டது. இந்த பணி அடுக்கு 1.4 கிலோமீட்டர் ஆழம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | சிறுகோள் மீது NASA - SpaceX ஏவும் விண்கலம்; பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படுமா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News