Viral Video: ஆமைக்கு ஆசையாய் ஊட்டி விடும் குரங்கு; இணையவாசிகளை கவர்ந்த க்யூட் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், மனித குரங்கு ஆமையுடன் ஆப்பிளைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2022, 01:49 PM IST
  • சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ.
  • விலங்குகளும் சக விலங்குகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு பரஸ்பரம் நட்புடன் அன்பாக பழக விரும்புகின்றன.
Viral Video: ஆமைக்கு ஆசையாய் ஊட்டி விடும் குரங்கு; இணையவாசிகளை கவர்ந்த க்யூட் வீடியோ title=

அன்பு என்பது சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும், பிற உயிரினங்களிடம் அன்பு செலுத்தக் கூடியவை. விலங்குகளும் சக விலங்குகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு பரஸ்பரம் நட்புடன் அன்பாக பழக விரும்புகின்றன. வீடியோவில் காணப்படும் இந்த மனித குரங்கையும் ஆமையும் போல. ஆச்சரியமாக இருக்கிறதா...  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், மனித குரங்கு ஆமையுடன் ஆப்பிளைப் பகிர்ந்து கொண்டு, அதற்கு ஊட்டி விடுவதைக் காணலாம்.

ட்விட்டரில் Buitengebieden வெளியிட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி இதயங்களை வென்று வருகிறது. "பகிர்ந்து உண்ணுதல் என்பது அக்கறையை வெளிப்படுத்துகிறது" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

சிம்பன்சி என்னும் மனித குரங்கு ஆப்பிளை சாப்பிடுவதை வீடியோவில் காணலாம். கடித்த பிறகு, அதனை தன் அருகில் அமர்ந்திருக்கும் ஆமைக்குக் கொடுக்கிறது. இரண்டு நண்பர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மற்றொரு மனித குரங்கு ஆமையை நெருக்கி வருவதையும் வீடியோவில் காணலாம்.

வைரலான வீடியோவை கீழே காணலாம்:

பகிரப்பட்ட பிறகு, இந்த வீடியோ ட்விட்டரில் சுமார் 8.8 மில்லியன் பார்வைகளையும் 3.4 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது. பதிவை இதுவரை 49,000க்கும் மேற்பட்ட பயனர்கள் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

மனித குரங்கின் அன்பான நடத்தைக்காக பயனர்கள் இதயப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். "உயிரினங்களுக்கிடையில் நான் நாகரீகத்தை விரும்புகிறேன்" என்று ஒரு பயனர் எழுதினார், மற்றொருவர் "பகிர்ந்து கொள்ளும்போது உணவின் சுவை இருமடங்காகும் என என்று அம்மா எப்போதும் கூறுவார்." என பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட Buitengebieden, பார்வையாளர்களால் அதிகம் விரும்பப்படும் சமூக ஊடக மேடையில் மிக சுவாரஸ்யமான விலங்கு வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறார். 

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News