Watch: இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன' இசையை இசைத்த US வீரர்கள்!

கூட்டுப் பயிற்சியின் கடைசி நாளில் இந்திய வீரர்களுக்காக அமெரிக்க ராணுவ இசைக்குழு இசைத்த  'ஜன கண மன' இசை..!

Last Updated : Sep 19, 2019, 11:47 AM IST
Watch: இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன' இசையை இசைத்த US வீரர்கள்! title=

கூட்டுப் பயிற்சியின் கடைசி நாளில் இந்திய வீரர்களுக்காக அமெரிக்க ராணுவ இசைக்குழு இசைத்த  'ஜன கண மன' இசை..!

வாஷிங்டனில் இந்திய மற்றும் அமெரிக்க இராணுவத்திற்கு இடையிலான கூட்டுப் பயிற்சியின் போது அமெரிக்க இராணுவ இசைக்குழு இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன' இசையை இசைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கூட்டுப் பயிற்சியின் கடைசி நாளான நேற்று அமெரிக்க வீரர்கள் தேசிய கீதத்தை வாசித்தனர்.

அமெரிக்காவின் லூயிஸ் மெக்கார்ட் பயிற்சி மையத்தில் கடந்த 5 ஆம் தேதி இந்தியா - அமெரிக்க ராணுவ வீரர்களின் கூட்டு பயிற்சி துவங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான 15-வது பயிற்சியான, இந்த பயிற்சிக்கு, 'யுத் அப்யாஸ் 2009' என பெயரிடப்பட்டது. இந்த பயிற்சி நேற்று நிறைவடைந்தது. பல்வேறு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

பயிற்சியின் போது, அமெரிக்க ராணுவ இசைக்குழுவினர் , இந்திய தேசிய கீதத்தை முழுமையாக இசைத்தனர். இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பயிற்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமெரிக்க ராணுவ வீரர் ரன்பிர் கவுர் என்ற பெண் அதிகாரியும் கலந்து கொண்டார். அமெரிக்க ராணுவத்தில் இணைந்த, முதல் சீக்கிய பெண் இவர்.

இதற்க்கு முன்னர், இந்திய மற்றும் அமெரிக்கப் படையினரின் வீரர்கள் அசாம் ரெஜிமென்ட்டின் பிரபலமான அணிவகுப்பு பாடலான 'பட்லூரம் கா பதான் ஜமீன் கே நீச்சே ஹை' பாடலை பாடிக்கொண்டே நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News