எதிர்பாராத நகைச்சுவையான வீடியோக்கள் பல இணையத்தில் வளம் வருகின்றன. சமீபத்தில் தெலுங்கானாவின் ஜங்கன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஏரியில் தனது ஓட்டுநர் திறமையை காண்பிக்க ஒரு நபர் தண்ணீரில் காரை ஓட்டி உள்ளார். ஓட்டுநர் பயிற்சியின் போது கவனக்குறைவாக காரை நேராக ஏரிக்குள் இறக்கி உள்ளார். இந்த விபத்து உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிறகு காருக்குள் இருந்த பயிற்சி ஓட்டுனரும், டிரைவிங் சொல்லி குடுத்த நபரும் தப்பித்து வெளியே வருகின்றனர். இந்த சம்பவம் கவலையளிக்கும் அதே வேளையில், பலருக்கு சிரிப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. இது வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையையும் சில நேரங்களில் புதிய அனுபவங்களின் நகைச்சுவையான விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் படிக்க | CPR செய்து பாம்புக்கு உயிர் தந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ
இந்த வியத்தகு சம்பவத்தை காட்டும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடக தளங்களில் வைரலாகி, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜங்கானில் அமைந்துள்ள படுகம்மா குண்டா ஏரியில் கார் ஓரளவு மூழ்கியிருப்பதை வீடியோவில் காணலாம். வாகனத்தில் இருந்து வெளிவரும் பயிற்சி ஓட்டுநர் மற்றும் பயிற்றுவிப்பாளர் இருவரையும் காண முடியும். மற்றொரு நபர், துணிச்சலுடன் இருவரையும் மீட்கும் நோக்கத்துடன் ஏரிக்குள் குதித்தார். இந்த வீரச் செயல் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் இருவரும் தண்ணீரில் சிரமப்பட்டு நீந்தும் வேளையில், அவர்களுக்கு உதவுகிறார். இதற்கிடையில், உள்ளூர்வாசிகளின் கரையோரத்தில் கூடி, அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்த்து வருகின்றனர்.
A car plunged into the Bathukamma Kunta lake in #Jangaon on Friday evening. A man suddenly accelerated and lost control of the steering, while practicing #driving near the lake, causing the car to plunge into the tank.
A local quickly rushed to the scene and rescued 2… pic.twitter.com/J5cTHFHmak
— Surya Reddy (@jsuryareddy) October 19, 2024
அறிக்கைகளின்படி, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்துள்ளது. குந்தா ஏரிக்கு அருகில் உள்ள இடத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கவனக்குறைவாக பிரேக்கைப் பயன்படுத்துவதற்கு பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்தி உள்ளார். இதனால் வாகனம் திசைதிருப்பப்பட்டு, ஏரி நீரில் மூழ்கி உள்ளது. வாகனம் மெதுவாக ஏரியின் மேற்பரப்பிற்கு அடியில் மூழ்கத் தொடங்கியதும், உள்ளே இருந்த இரண்டு நபர்கள் வெளியில் சிரமப்பட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவ விரைவாக நடவடிக்கையில் இறங்கினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் வாகன ஓட்டுநர் பள்ளியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பானிபூரி சாப்பிடவே இனி யோசிப்பீர்கள்... இப்படியா மாவு பிசைவீங்க - ஷாக் வைரல் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ