Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!

பாகிஸ்தானில் இந்து மத கோயில்கள் தாக்கப்படுவது இது முதன் முறையல்ல. சிந்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2020, 01:30 PM IST
  • பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலான மக்கள் இந்து கோயிலை இடித்து தரைமட்டமாக்கினர்.
  • கோயிலுக்கு தீ வைக்கப்பட்டபோதும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.
  • வீடியோ வைரல் ஆகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!! title=

ஒரு வெட்கக்கேடான சம்பவத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவிலை உள்ளூர் முஸ்லீம் மதகுருமார்கள் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் புதன்கிழமை தீ வைத்து அழித்தனர்.

ஊடக செய்தியின் படி, பாகிஸ்தானில் சுன்னி தியோபந்தி அரசியல் கட்சியான ஜாமியத் உலமா-இ இஸ்லாம்-பாஸ்ல் (JUI-F) ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. அங்கு பேச்சாளர்கள் உக்கிரமான உரைகளை நிகழ்த்தினர். அதன் பின்னர் இந்த கூட்டம் கோயிலில் புகுந்து, கோயிலுக்கு தீ வைத்து கோயிலை தரைமட்டமாக்கியது.

JUI-F KP அமீர் மௌலானா அதௌர் ரஹ்மான், தங்கள் கட்சி கூட்டத்திற்கு பின்னரே கோயில் எரிக்கப்பட்டதால், அந்த சம்பவத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆகியுள்ளன. பலர் கோயிலின் சுவரையும் கூரையையும் உடைப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் கோவில் கட்டிடத்திலிருந்து புகை வருவதையும் காண முடிகிறது. இந்து கோயில் (Hindu Temple) தரைமட்டமாக்கப்பட்டபோது, உள்ளூர் நிர்வாகமும் காவல்துறை அதிகாரிகளும் அமைதியான பார்வையாளர்களாக பார்த்துக்கொண்டு இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இந்து சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான இந்த செயல் பாகிஸ்தான் மற்றும் உலகின் பிற பகுதிகளை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்களால் பரவலாக கண்டிக்கப்படுகிறது.

லண்டனைச் (London) சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஷமா ஜுன்ஜோ, “இது புதிய பாகிஸ்தான்! பி.டி.ஐ அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் உள்ள கராக் என்ற நகரத்தில் இன்று ஒரு இந்து கோயில் அழிக்கப்பட்டது. கும்பல் அல்லாஹ்-ஓ-அக்பர் என்று முழக்கமிட்டதால், காவல் துறையோ அல்லது படைகளோ அவர்களை நிறுத்தவில்லை. இது ஒரு வெட்கக்கேடான நாள், உண்மையில் கண்டனத்திற்கு அப்பாற்பட்டது!" என்று எழுதினார்.

ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான ரபியா மெஹ்மூத் மத தளங்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, “2020 பாகிஸ்தானில்: கேபி, கரக்கில் உள்ள இந்து கோயில், ஒரு கொடூரமான கும்பலால் கொடூரமாக அழிக்கப்பட்டு இடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்துத்துவாவின் உயர்வு குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் பேசுகிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ள பாசிச மூடர்கள் தொடர்ந்து முஸ்லிம் அல்லாத பாகிஸ்தானியர்களை எந்த அச்சமுமின்றி தாக்கி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

ஆனால், பாகிஸ்தானில் (Pakistan) இந்து மத கோயில்கள் தாக்கப்படுவது இது முதன் முறையல்ல. சிந்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. அக்டோபரில், பாகிஸ்தானின் தென்கிழக்கு சிந்து மாகாணத்தில் ஒரு இந்து கோயில் அழிக்கப்பட்டு சிலைகள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, 75 லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் சிந்த் மாகாணத்தில் வசிக்கின்றனர்.

ALSO READ: இந்த ஸ்பா உங்களுக்கு பாம்பு மசாஜ் வழங்குகிறது - Watch

ALSO READ: Siberia-வின் கொடூரக் குளிரில் உறைந்துபோன noodles, viral ஆன post!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News