உலகில் எந்த வகை உயிரினமாக இருந்தாலும் சரி, அதன் குட்டிகள் மீது தாய் வைத்திருக்கும் பாசம் வார்த்தையால் கூறமுடியாதது. மனிதர்கள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி தனது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் காக்கும் அரணாக தாய் செயல்படுவார்கள். இதனை உணர்த்தும் விதமாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது, மேலும் இந்த வீடியோ பலரின் இதயங்களையும் கவர்ந்து இருக்கிறது. அந்த வீடியோவில் யானை கூட்டங்கள் காற்றுக்குள் செல்ல சென்று கொண்டிருக்கும்போது இடையில் ஆறு ஓடுகிறது, அந்த யானைக்கூட்டங்கள் ஒன்றபின் ஒன்றாக ஆற்றை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்: குரலால் அதிகாரம் செய்யும் காட்டு ராஜா
அப்போது ஒரு குட்டியானை, அதன் தாய் யானையுடன் செல்ல வேகமாக முந்திக்கொண்டு ஓடுகிறது, அப்போது திடீரென கால் தடுமாறி தண்ணீரில் விழுந்து விடுகிறது. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீருக்குள் குட்டியானை மூழ்க ஆரம்பிக்கிறது, பின்னர் தாய் யானை விரைவாக அதன் தும்பிக்கையை பயன்படுத்தி தண்ணீரில் தத்தளித்த தனது குட்டியை தூக்கிவிடுகிறது. அதன்பிறகு தாய் யானையும், குட்டி யானையும் அதன் யானைக்கூட்டங்களுடன் இணைந்து ஆற்றை கடந்து செல்கிறது. இந்த வீடியோவை வன அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அந்த வீடியோவுடன் ' இன்று நீரில் மூழ்கிய குட்டியானையை தாய் யானை கைப்பற்றியது. இந்த வீடியோ நார்த் பெங்காலில் உள்ள நக்ரகட்டா என்கிற பகுதியில் படப்பிடிப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Mother elephant saving calf from drowning is the best thing you watch today. Video was shot near Nagrakata in North Bengal. Via WA. pic.twitter.com/aHO07AiUA5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 25, 2022
இணையதள பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவினை பல்லாயிரனக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவிற்கு எக்கச்சக்கமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது, மேலும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ரிங் மாஸ்டரை பின்னி பெடலெடுக்கும் சிங்கம்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR