லண்டனில் லுங்கி அணிந்து செல்லும் பெண்! ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோ!

லண்டன் தெருக்களில் லுங்கி அணிந்து பொது இடங்களுக்கு நடந்து செல்லும் பெண் ஒருவரின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : May 26, 2024, 02:24 PM IST
  • லுங்கி அணிந்து செல்லும் பெண்.
  • பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
  • இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லண்டனில் லுங்கி அணிந்து செல்லும் பெண்! ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோ! title=

தற்போது உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களின் மூலம் இணைந்துள்ளதால் உலகில் எங்கு ஒரு ஃபேஷன் ட்ரெண்டாலும் அது நமது ஊர் வரையிலும் உடனே  பிரதிபலிக்கிறது. பெரும்பாலும் ஒருவரின் கலாச்சாரம் உடைகளில் இருந்து தொடங்குகிறது. நமது உடை மற்றும் பேச்சு நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை பற்றி அடுத்தவர்களுக்கு புரிய வைக்கிறது. இந்தியர்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மேலும் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அந்த நாடுகளுக்கும் பரப்புகின்றனர். இவை அந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கும் எளிதில் பிடித்துவிடுகிறது. 

மேலும் படிக்க | கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!

சமீபத்தில், லண்டனில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து சென்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ இடம் பெற்று இருந்தது. லண்டனில் லுங்கி அணிந்து தைரியாக சென்ற அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைத்தளத்தை தாண்டி இங்கிலாந்து மக்களிடத்திலும் இந்த உடை பிடித்து போக்கியுள்ளது இந்த வீடியோவில் தெரிகிறது. பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த @valerydaania என்று இன்ஸ்டாகிராம் பெண்மணி இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by valery (@valerydaania)

இந்த வைரலாக வீடியோவில், வலேரி நீல நிற லுங்கியை அணிந்து ஸ்டைலாக நடந்து செல்கிறார். இதே உடையில் நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்கிறார். மேலும் இதனுடன் ஸ்டைலான சன்கிளாஸ்களை அணிந்து இருந்தது தான் ஹைலைட். லண்டன் தெருக்களில் பயணம் செய்த பிறகு, அதே உடையில் ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டிற்கு செல்கிறார். இந்த வித்தியாசமான உடையில் அவரை பார்த்ததும் பலரும் ஆச்சர்யமாக பார்த்து சென்றனர். மேலும் சிலர் அவரது தனித்துவமான பாணியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலர் உடை நன்றாக உள்ளது என்று புன்னகையுடன் கடந்து சென்றனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by valery (@valerydaania)

"லண்டனில் லுங்கி அணிந்திருக்கிறேன்" என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பதிவேற்றி உள்ளார் வலேரி.  அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பதிவேற்றிய உடனே வீடியோ வைரலானது. பலரும் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தியதற்காக அவரை பாராட்டினர். ஒருவர் “ஹாஹா அற்புதம். இதனை செய்ததற்கு உங்களுக்குப் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "அக்கா நீங்கள் ஒரு பெரிய வணக்கத்திற்கு தகுதியானவர், நான் சிரிக்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News