அணிலின் தாகத்தை தீர்த்த மனிதர்! இணையத்தில் வைரலான காட்சி!

தாகத்தில் இருந்த அணிலுக்கு வழிப்போக்கர் ஒருவர் பாட்டிலில் தண்ணீரை கொடுத்த காட்சி இணையத்தில் பலரின் இதயங்களை கவர்ந்து வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 26, 2022, 04:46 PM IST
  • அணிலுக்கு தண்ணி கொடுத்த மனிதர்.
  • இது பலரது இதயங்களை கவர்ந்துள்ளது.
  • இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அணிலின் தாகத்தை தீர்த்த மனிதர்! இணையத்தில் வைரலான காட்சி! title=

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல சிறிய உயிரினங்கள் அவதிப்பட்டு வருகின்றன, அவற்றின் தேவைகளை பலரும் அறிவதில்லை.  இந்நிலையில் வழிப்போக்கர் ஒருவர் சாலையோரத்தில் தாகத்தில் தவித்திருந்த அணிலுக்கு தண்ணீர் கொடுத்து அதன் தாகத்தை தணித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதுபோல ஏற்கனவே ஒரு நபர் தாகத்தில் இருந்த பச்சை பாம்பு ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீரை ஊற்றி அதனை குடிக்க வைத்த காட்சி பலரையும் கவர்ந்த நிலையில் தற்போது அணிலின் தாகத்தை தீர்த்த வழிப்போக்கரின் மனிதநேய செயல் பலரின் இதயங்களையும் கவர்ந்து இருக்கிறது.

மேலும் படிக்க | சிங்கத்தை சூழ்ந்த முதலை கூட்டம், வென்றது யார்? வைரல் வீடியோ

இந்த வீடியோவானது பைடெங்பைடன் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் அணில் ஒன்று சாலையோரத்தில் உள்ள பாறாங்கற்கள் மீது நிற்பதை காண முடிகிறது.  அணிலுக்கு எதிர்புறம் சாலையில் தொப்பி மற்றும் காற்சட்டை அணிந்துகொண்டு ஒரு வழிப்போக்கர் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அதிலுள்ள தண்ணீரை அணிலுக்கு கொடுக்கிறார்.  அந்த அணில் நின்றுகொண்டு வேகவேகமாக அந்த பாட்டிலை தனது இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு பாட்டிலில் உள்ள தண்ணீரை பருகுகிறது.  இந்த காட்சி பார்ப்பதற்கு அழகானதாகவும், இதயத்தை கவரும் வகையிலும் அமைந்து இருக்கிறது.

 

மேலும் இந்த வீடியோவுடன் 'நன்றி' என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.  வெறும் 15 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவிற்கு சில இதய எமோஜிகளை பதிவிட்டுள்ளனர், ஒரு பயனர் விலங்குகளிடம் 'அன்பாக உள்ளவர்களை நான் விரும்புகிறேன்' என்று கமெண்ட் செய்துள்ளார், மற்றொருவர் 'இது மிகவும் இனிமையாக இருக்கிறது' என்றும், மற்றொருவர் 'உதவி மற்றும் இரக்க குணத்தை இது காண்பிக்கிறது' என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | பாம்பு வாலை பிடித்து விளையாடும் சிறுவன், நடுங்க வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News