Viral Video: இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
மனிதன் குரங்கிலிருந்து (Monkey) தோன்றினான் என கூறுகிறோம். அதைப் போலவே, இன்னும் நம்மில் பலரில் அதற்கான அடையாளங்கள் தெரியத்தான் செய்கின்றன. ஆனால், குரங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்வதும் இயல்புதான். அப்படிப்பட்ட ஒரு குரங்கின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.
ஒரு குழந்தையைப் போன்ற பழக்கவழக்கங்களுடன் காணப்படும் இந்த குரங்கின் அறிவாளித்தனத்தைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
ஒரு குரங்கு ஒரு மனிதனின் கண்ணாடிகளை திருடி விடுகிறது. தனக்கு எதுவும் கிடைக்காமல் அந்த கண்ணாடியைத் திருப்பித் தர மாட்டேன் என அடம்பிடிக்கிறது. இந்த வேடிக்கையான வீடியோவை IPS அதிகாரி ரூபின் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவில், தலைப்பாக, "ஏக் ஹாத் தோ, ஏக ஹாத் லோ", அதாவது "அந்த கையால் கொடுத்து இந்த கையால் எடுத்துக்கொள்" என எழுதியுள்ளார்.
குரங்கின் அந்த வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:
Smart
Ek haath do,
Ek haath lo pic.twitter.com/JHNnYUkDEw— Rupin Sharma IPS (@rupin1992) October 28, 2021
இந்த வீடியோவில் (Video), குரங்கு ஒரு இரும்பு மெஷ் மேல் அமர்ந்திருப்பது தெரிகிறது. மாம்பழ பானம் தன் கையில் வந்து சேரும் வரை, அந்த குரங்கு கண்ணாடியை கவனமாக கையிலேயே பிடித்துக்கொண்டு இருக்கிறது. தன் கண்ணாடியை களவாடிய குரங்கிடமிருந்து அதை திரும்பப்பெற அந்த நபர் எவ்வளவோ பேசிப்பார்த்தாலும், புத்திசாலியான குரங்கு, தனக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணாடியை கொடுக்கக்கூடாது என உறுதியாக இருக்கிறது.
ALSO READ: போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!!
இறுதியாக அந்த நபருக்கும் குரங்குக்கும் இடையில் ஒரு ஒபந்தம் உருவாகி, கண்ணாடியைத் திருப்பித்தர, குரங்குக்கு மாம்பழ பானம் கொடுக்கப்படுகிறது.
இந்த வீடியோ வைரல் (Viral Video) ஆகி இணைய வாசிகளை கவர்ந்துள்ளது. இதற்கு பலர் பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.
சிலாரது கமெண்டுகளை இங்கே காணலாம்:
குரங்கின் புத்திக்கூர்மையை ஒரு பயனர் வியந்து பாராட்டினார்:
Awesome...... Monkeys are intelligent animals
— Sivamaneppa anamala (@sivamaneppa) October 28, 2021
சில பயனர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
Had to face similar situation at Jakhu Temple Shimla. A monkey too away my spectacles and I had to bargain with a packet of roasted Channe.
— Kiran Kumar Madan (@kirankrmadan) October 28, 2021
This actually happened during our visit to Vrindavan
— Capt.manojbagori (@mannojbagoria) October 29, 2021
பதிவேற்றப்பட்டதில் இருந்து, இந்த வீடியோ சுமார் 20,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.
ALSO READ: குரங்கு கையில் பூமாலை ஆனது ‘ஒரு லட்சம் ரூபாய்’ பணப்பை..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR