வல்லவன் வாழ்வான் என்ற விதி வனத்தில் சரியாக பொருந்தும். புலி சிங்கம் போன்ற வேட்டை விலங்குகள் தங்களை விட பலவீனமான விலங்குகளை எளிதில் வேட்டையாடி வயிற்றை நிரப்புவதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். இங்கேயும் சிங்கங்கள் கூடி எருமையை வேட்டையாடுவதை காணலாம். ஆனால், வேட்டைக்குப் பிறகு சிங்கங்கள் இடையே சண்டை ஏற்பட்டாதால், கிடைத்த இரையை கோட்டை விட்டன சிங்கங்கள். பல சிங்கங்கள் ஒன்றாக அமர்ந்து அவற்றிற்கு அருகில் கிடக்கும் எருமையை தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கிருந்த பெண் சிங்கங்களுக்கும் ஆண் சிங்கங்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதனை பயனபடுத்திக் கொண்ட சாதுர்யமான எருமை தப்பித்தது.
இதுவரை மனிதர்களுக்குள் தான் குடும்ப சண்டை வந்து பார்த்திருப்போம். ஆனால், விலங்குகளும் இதில் விதிவிலக்கல்ல என்பதை இந்த வீடியோவின் மூலம் உணரலாம். இந்த வீடியோவில், சிங்கங்களின் இடையே சண்டை மூண்டதும் அடுத்த கணம் அவை, இரையை பார்க்காமால், பரஸ்பரம் சண்டையிடுவதை வைரல் வீடியோவில் நீங்கள் காணலாம். இதைத் தான் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என சொல்கிறார்கள் போலும்.
சிங்கங்களின் வேட்டை வீடியோவை இங்கே காணலாம்:
The luckiest buffalo in the world
He was seconds away from becoming a meal, but a family dispute among the lions broke out, causing them to stop eating. Without hesitation, the fortunate buffalo quickly ran back to its tribe. pic.twitter.com/rZgQoP6GiJ
— Hicham Mounadi (@h_mounadi) December 5, 2023
சிங்கங்கள் இடையே மூண்ட சண்டையினால், புத்திசாலி எருமை தப்பிக்கிறது. இதிலிருந்து ஒற்றுமை இல்லை என்றால், எவ்வளவு வலிமையான விலங்காக இருந்தால் பின்னடைவு தான் என்பதை அறிந்து கொள்ளலாம். இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்றால் மிகையில்லை. இந்த வீடியோ Hicham Mounadi @h_mounadi என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 4.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர்.
கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம். சிங்கம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அதன் கம்பீரமான தோற்றமும், அதிர வைக்கும் கர்ஜனையும் தான். சிங்கம் வனத்தின் ராஜா என்று அழைப்பக்கப்படுவதற்கான காரணமும் இது தான். எந்த விலங்குக்கும் சிங்கத்தை எதிர் நிற்கும் தைரியம் இருக்காது. யானை சிங்கத்தை எதிர்த்து நிற்கும் என்றாலும், பொதுவாக சிங்கம் என்றாலே அது வீரத்தையும், கம்பீரத்தையும் நம் முன்னால் கொண்டு வருகிறது. காட்டு ராஜாவான சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும். காட்டில் உள்ள மற்ற விலங்குகள் எல்லாம் அதன் சத்தம் கேட்டாலே அடங்கிவிடுகின்றன.
மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ