வைரல் வீடியோ: பரபரப்பான சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது வேகமாக வந்த கார் மோதிய சம்பவத்தில், பெண் ஒருவர், மயிரிழையில் தப்பித்த காட்சியை வீடியோ பதிவு செய்துள்ளது. வீடியோவில், ஒரு பெண் ஆட்டோ ரிக்ஷா ஒன்றை நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் பின்னால் வந்து மோதியது. கார் மோதிய நிலையில் ஆட்டோ சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததைக் காணலாம். அப்போது சாலையில் நடந்து செல்லும் அந்த பெண் ஒரு வாகங்களுக்கு இடையில் வருவதையும் வீடியோவில் காணலாம். எனினும் அந்த பெண் அதிர்ஷ்ட வசமாக சேதம் ஏதும் இன்றி, இருப்பதையும் வீடியோவில் காணலாம். இதற்கிடையில், அங்கு இருந்தவர்கள் ஆட்டோ டிரைவரை நோக்கி விரைந்தனர்.
இந்த வீடியோவை இந்திய காவல் துறை (ஐபிஎஸ்) அதிகாரி விசி சஜ்ஜனார் வியாழக்கிழமை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவை பகிர்ந்து கொண்டு, "மயிரிழையில் உயிர் தப்பிய நிகழ்ச்சி; ஆனால் எவ்வளவு காலம் நாம் அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்கிறோம்? சாலைகளில் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ‘இவன் போற ரூட்ல போய்டாதீங்க மக்கா’ வண்டி ஓட்டி பழகுங்கடா; வைரல் வீடியோ
ஆட்டோ ஒன்றின் மீது கார் மோதிய விபத்தில் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ:
Narrow escape but how long do we depend on luck?
Be responsible on Roads #RoadSafety pic.twitter.com/JEck2aXIuK
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) September 1, 2022
வீடியோவைப் பார்த்த பெரும்பாலானோர் அதிர்ச்சி வெளியிட்டதோடு, சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளாவிட்டால், இதுபோன்ற சம்பவம் யாருக்கும் ஏற்படலாம் என்று கூறினார். ஒரு பயனர் கார் டிரைவரை கடுமையாக சாடி, " அலட்சிய போக்கு, அதிவேகம். கடுமையாக பாடம் கற்பிக்கும் வகையில் அவர்களின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மற்றொரு பயனர், “குடிமக்கள் அனைவரும், மற்றவர்களின் பாதுகாப்பும் தங்கள் பொறுப்பு என்பதை உணர வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை நாம் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
மற்றொரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “வாகனம் ஓட்ட்டும் போது மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். சாலையில் நடக்கும்/ கடக்கும் நபர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும். அரசாங்கம் சட்ட இயற்றி அறிவுறுத்தலாம். ஆனால் குடிமக்கள் அதனை பின்பற்றுவர்களாக இருக்க வேண்டும்” என பதிட்டுள்ளார்.
மேலும் படிக்க | திருமணத்தில் விருந்தினர்கள் செய்த கலவர காரியம்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ